Saturday 2 July 2016

திரும்ப திரும்ப பேசற நீ - நொந்து போன நிருபர்கள் டொக்கு வைத்த கமிசனர்




பரபரப்பான ஸ்வாதி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக கொலையாளி அடையாளம் காணப்பட்டு நெல்லையில் கைது செய்யப்பட்டான். Muthaleef

ஸ்வாதி கொலை வழக்கின் பிரச்சனையே கொலைக்கான நோக்கம் என்ன என்பது தான். கிட்டத்தட்ட ஒரு வாரத்தில் கொலைக்கான காரணம், கொலையாளி பற்றிய விபரங்களை காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை.

கொலை நடந்த பகுதியை ஒட்டிய  சூளை மேடு நெடுஞ்சாலை தெருக்கள் என அனைத்து கடைகள் வீடுகளில்   உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்தனர். அதில் உள்ள அடையாளங்களை வைத்து ராம்குமாரை போலீசார் செங்கோட்டையில் கைது செய்ய ராம்குமார் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவல் நேற்றிரவு காட்டுத்தீயாக பரவ காலையில் கமிஷனர் பிரஸ் மீட் என்று அறிவிக்கப்பட்டவுடன் தமிழக ஊடகங்கள் மட்டுமல்ல தேசிய ஊடகத்தினாரும் கமிஷனர் ஸ்வாதி கொலை வழக்கு குறித்து என்ன பதில் சொல்ல போகிறார் என்று நூற்றுக்கணக்கில் குவிந்தனர்.

ஸ்வாதியின் கொலைக்கான காரணம் என்ன மூன்று மாதத்தில் கோபம் கொண்டு கொலை செய்வானா ? சரி எப்படி துப்பறிந்தார்கள், நோக்கம் என்ன என்பது பற்றி எல்லாம் பல கேள்விகளுடன்  பிரஸ் மீட்டுக்கு வந்தனர்.

ஆனால் எல்லோருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. ஆரம்பத்தில் எல்லொருக்கும் தெரிந்த விபரங்களை கூறி கைது வரை சொன்ன கமிஷனர் கேள்விக்கு வந்தார். கேள்வியும் பதிலும்

கேள்வி:  ராம்குமாருக்கும் ஸ்வாதிக்கும் என்ன தொடர்பு ?
பதில் : வழக்கு விசாரணையில் உள்ள விபரங்களை எல்லாம் கேட்காதீர்கள்.

கேள்வி: மூன்று மாதத்திலேயே ஒருவர் கோபம் கொண்டு இந்த அளவுக்கு கொலை செய்ய காரணம் என்ன?

பதில் : அதான் சொல்றேனே எங்களை இன்வெஸ்டிகேட் செய்ய விடுங்கள் இன்றே என்னிடம்  பதிலை கேட்காதீர்கள்.

கேள்வி: எப்படி  ராம்குமாரை குற்றவாளி என்று முடிவு செய்தீர்கள்
பதில் : எல்லாம் பிரஸ் ரிலீசில் உள்ளது.

கேள்வி: வெறுமனே பின் தொடரும் ஒருவரை எப்படி கொலையாளி என்று எப்படி முடிவு செய்தீர்கள்
பதில்: எல்லாம் பிரஸ் ரிலீசில் இருக்கு

கேள்வி: ராம்குமார் குற்றத்தை ஒப்புகொண்டாரா?
பதில் : எங்களை இண்வெஸ்டிகேஷன் செய்ய விடுங்கள்

இதே போன்ற பாணியில் மேல இருக்கிறவன் பார்த்துக்குவான் , மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான் பாணியில் பதில் சொல்ல செய்தியாளர்கள் வடிவேல் படத்தில் வரும் காமெடி போல் திரும்ப திரும்ப பேசற நீன்னு சொல்லாத குறையாக நொந்து நூடுல்ஸ் ஆகிப்போனாங்க.

யார் யாரையோ கேள்விக்கணைகளால் மடக்கிய முக்கியமான முன்னணி செய்தியாளர்களே அசந்து போகும் அளவுக்கு கமிஷனர் பர்ஃபாமன்ஸ் இருந்தது.

No comments:

Post a Comment