Friday, 1 July 2016

நடந்தது என்ன? கொலையாளி சிக்கியது எப்படி? - உதவிய நண்பன் யார்?
ஸ்வாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் குறித்த பல தகவல்கள் வெளியாகி உள்ளன , கொலை நடந்ததற்கான காரணம் , செய்யப்பட்ட விதம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.  Muthaleef

ராம்குமார்(24) பொறியியல் பட்டதாரி , அப்பா பிஎஸ்என்எல் ஊழியர், தம்பி , தங்கை என அளவான குடும்பம். கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். பொறியியல் பட்டத்தை முழுமையாக முடிக்காத ராம்குமார் அதை முடிக்க சென்னை சூளைமேட்டில் எஸ்.ஏ.மேன்ஷனில் தங்கியிருந்துள்ளார்.

ராம்குமார் கல்லூரி பயிலும் போது எடுத்த படம்
சென்னை சூளைமேட்டில் தங்கி வேலை பார்த்து வந்த  ராம்குமார்  ஸ்வாதியை வேலைக்கு செல்லும் வழியில் பார்த்து  ஒருதலையாய் காதலித்துள்ளார். ஒரு கட்டத்தில் ஸ்வாதியிடம் தனது காதலை சொல்லியிருக்கலாம். ஸ்வாதி அதை மறுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.


 ஸ்வாதிக்கு ஏற்கனவே காதலன் இருப்பதும் தெரிந்து ராம்குமார் இன்னும் டென்ஷன் ஆகி தினமும் ஸ்வாதியை நெருக்க ஆரம்பித்துள்ளார். இதை பட்டும் படாமலும் தனது குடும்பத்தாரிடம் ஸ்வாதி கூறியுள்ளார்.
ஸ்வாதிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் மற்றவர்களுக்கு யாரோ ஒரு நபர் பின் தொடர்வதாக ஸ்வாதியால் சொல்லப்பட்டது.

ராம்குமார்
அவர் பின் தொடர்ந்து வருவது ஸ்வாதியின் குடும்பத்தாருக்கு தெரியும் ஆனால் அவர்கள் போலீசில் ஒத்துழைக்காததால் போலீசாரின் புலனாய்வில் தேக்கம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் கடும்  ஆத்திரமடைந்த ராம்குமார் ஸ்வாதியின் மேல் இருந்த கடுமையான ஆத்திரத்தில் கொலை செய்ய முடிவெடுத்துள்ளதாக போலீசார் கருதுகின்றனர்.

 இதற்காக முன் தயாரிப்புகளை எல்லாம் கச்சிதமாக செய்துள்ளார். நெல்லை பகுதிகளில் வாழை குலையை மட்டும் அறுக்க பயன்படும் நீண்ட பிடியுள்ள அரிவாளை தேர்வு செய்துள்ளார். எப்படி அரிவாளை வீசுவது என வாழை மரத்தில் வீசி ஒத்திகை பார்த்துள்ளதாக போலீசார் கருதுகின்றனர்.

பின்னர் ஸ்வாதி வந்து செல்லும் நேரம் எப்போது கூட்டம் இல்லாமல் இருக்கும் என்றெல்லாம் கச்சிதமாக நோட்டமிட்டுள்ளார். வெள்ளிக்கிழமை கூட்டம் குறைவாக இருப்பது தெரிந்துள்ளது. வெட்டிய பின்னர் எப்படி ஓடுவது எங்கு சுவர் ஏறி குதிப்பது ,அரிவாளை எங்கே வைத்து விட்டு ஓடுவது என்பதை எல்லாம் திட்டமிட்டு நோட்டம் பார்த்துள்ளார்.

24 ந்தேதி ஸ்வாதியின் தந்தை விட்டு சென்றவுடன் பின்னலேயே ரயில் நிலையம் சென்ற ராம்குமார் ஸ்வாதி குனிந்த நிலையில் ஸ்டேஷன் பெஞ்சில் அமர்ந்திருக்கும் போதே பின்னாலிலிருந்து அரிவாளால் கழுத்தை நோக்கி வெட்டியுள்ளார். அரிவாள் கொஞ்சம் மேலே உயர்ந்து தாடையை இரண்டாக பிளக்க மூளைக்கு செல்லும் முக்கிய ரத்தநாளம் துண்டிக்கப்பட்ட நிலையில் எழுந்த நிலையில் வேரறுந்த மரமாக ஸ்வாதி கீழே விழுந்து மரணமடைந்துள்ளார்.

பின்னர் ஸ்வாதியின் செல்போனை எடுத்துகொண்ட ராம்குமார் பை , அரிவாளை எடுத்துகொண்டு வேகமாக நடை மேடையில் ஓடி முன்கூட்டியே திட்டமிட்ட படி  அரிவாள் கைப்பிடியை துடைத்து டிராக் ஓரமாக மின்சார பெட்டியின் பின்புறம் வைத்து விட்டு சுவர் ஏறி குதித்து ஒன்றும் தெரியாதது போல் மேன்ஷனில் போய் உட்கார்ந்து கொண்டார்.

கொலையாளி கொலை செய்த விதம் போலீசாருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. கண்காணிப்பு கேமரா பதிவுகளும் ஒத்துழைக்கவில்லை. பின்னர் கொலையாளியின் புகைப்படம் மூலம் சூளைமேட்டில் தெருத்தெருவாக போலீசார் விசாரித்தபோதுதான் ராம்குமார் தங்கியிருந்த மேன்ஷன் வாட்ச் மேன் ஆமாம் இந்த பையன் இங்குதான் தங்கியிருந்தான் ஒரு வாரமாக ஆள் இல்லை என்று கூற அதன் பிறகு போலீசார் ஜெட் வேகத்தில் இயங்கியுள்ளனர்.

ராம்குமாரின் ஊர் அட்ரசை சேகரித்துள்ளனர். இதனிடையே ஊருக்கு சென்ற ராம்குமார் வீட்டில் விஷயத்தை கூறி அழுதுள்ளார். வீட்டாரும் அவருக்கு அடைக்கலம் கொடுத்து வீட்டில் வைத்துள்ளனர். இந்த கொலையில் ராம்குமாரின் நண்பர் ஒருவர் உதவி செய்துள்ளார். அவர் நெல்லையை சேர்ந்தவரா அல்லது சென்னையை சேர்ந்தவரா என தெரியவில்லை.


போலீசார் ராம்குமாரை பற்றி ரகசியமாக விசாரிக்க நேற்று காலை பெண் எஸ்.ஐ ஒருவரை மாறு வேடத்தில் அனுப்பி உள்ளனர். அவர் விசாரித்து உறுதி படுத்திய பின்னர் போலீசார் ராம்குமார் வீட்டுக்கு சென்றுள்ளனர். போலீசார் வருவதை அறிந்த ராம்குமாரின் தாத்தா உரக்க சத்தம் போட்டு போலீஸ் போலீஸ் வந்துட்டாங்க  என்று கூறி கதவை அடைத்துள்ளார்.

 இதற்குள் ராம்குமார் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக போலீசார் அவரை தடுத்து காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.
குடும்பத்தாரையும் தங்களது விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்து விட்டனர்.  ராம்குமார் தற்போது நலமாக இருக்கிறார்.


அவர் போலீசில் கொடுக்கும் வாக்குமூலத்தை பொறுத்தே உண்மை சம்பவங்கள் தெரியவரும். முதல் கட்ட விசாரணையில் ஒருதலை காதல் என போலீசார் நம்புகின்றனர். அடுத்தடுத்து நடைபெறபோகும் விசாரணை கொலைக்கான காரணத்தை வெளிக்கொணரலாம்.

No comments:

Post a Comment