பாண்டிச்சேரியில் முதல்வராக நாராயணசாமி பதவி ஏற்கும் விழாவில் கலந்துகொள்ளும் ஸ்டாலினுக்கு முன் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுவையில் காங்கிரஸ் திமுக கூட்டணி 17 இடங்களை வென்று ஆட்சி அமைத்துள்ளது.முதல்வராக நாராஅனசாமியும், அமைச்சர்களாக நமச்சிவாயம் உள்ளிட்டவர்களும், சபாநாயகராக வைத்தியலிங்கமும் இன்று பதவி ஏற்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் திமுக சார்பில் கலந்துகொள்ள வேண்டும் என நாராயணசாமி நேரில் வந்து சென்னையில் கருணாநிதி மற்றும் ஸ்டாலினை சந்தித்து அழைப்பு விடுத்தார். இந்த விழாவில் ஸ்டாலின் கலந்துகொள்வார் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார்.அதன்படி இன்று மதியம் 12 மணிக்கு நடக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் ஸ்டாலினுக்கு முன் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது. விழாவிற்கு வந்த அவரை சகல மரியாதைகளுடன் முன் வரிசையில் அதிகாரிகள் அமரவைத்தனர்.
No comments:
Post a Comment