Sunday 12 June 2016

கண்டெய்னரில் கைப்பற்றப்பட்ட ரூ.570 கோடி சிபிஐ விசாரணை வேண்டும் - திருமாவளவன் கோரிக்கை



சட்டப்பேரவைத் தேர்தலின் போது திருப்பூரில் ரூ.570 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது பற்றி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் அனைத்து உண்மைகளும் வெளிவரும் என்று திருமாவளவன்தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் சட்டப்பேரவைத் தேர்தலின் போது திருப்பூரில் ரூ.570 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது பற்றி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் அனைத்து உண்மைகளும் வெளிவரும். இந்த பணம் யாருடையது? எங்கிருந்து அனுப்பப்பட்டது? பணம் பிடிபட்ட போது ரகசியங்களை காப்பாற்ற உதவியவர்கள் யார்? யார்? என்பது சிபிஐ விசாரிக்கும் போதுதான் உண்மை வெளிவரும். அதனால்தான் சிபிஐ விசாரணை கோருகிறோம் என்று தெரிவித்தார்.
சட்டமன்ற தேர்தலில்  தேமுதிக, தமாகா மக்கள் நலக்கூட்டணி வெற்றி பெறாவிட்டாலும் துவண்டு விடவில்லை. இந்த கூட்டணி வருகிற உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும். தைரியமாக தேர்தலை சந்திப்போம் என்று தெரிவித்தார்.



No comments:

Post a Comment