Monday 30 May 2016

அதிமுக தோற்றதற்கான காரணங்கள் - ஜெ விசாரணை




தமிழகம் முழுதும் அதிமுக தோற்றதற்கான காரணங்கள் திரட்டப்படுகிறது. கட்சிக்காரர்கள்,நிர்வாகிகள், பொறுப்பில் இருப்பவர்கள் கோஷ்டிகள், பொதுமக்கள் , என அனைத்து தரப்பினரிடமும் தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதன் முழுமையான ரிப்போர்ட் மேலிடத்திற்கு அனுப்பப்படும் . இதன் பேரில் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என சொல்கிறார்கள். 

எப்படியும் கட்சி ஜெயிக்கும் என மெத்தனமாக இருந்தவர்கள், வேலை செய்யாமல் சும்மா இருந்த நிர்வாகிகள், கோஷ்டி பூசலால் வேலை செய்யாமல் எதிர்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள், எதிர்க்கட்சியினரிடம் விலை போனவர்கள், கட்சிகொடுத்த வேலையை முறையாக செய்யாதவர்கள், தொகுதி ,பகுதி, வட்ட நிர்வாகிகள் பற்றியும் தனித்தனியாக ரிப்போர்ட் போடப்படுகிறதாக கூறப்படுகிறது.


இது தவிர தொகுதியில் என்னென்ன பிரச்சம்னைகள் வெற்றிக்கு பாதிப்பாக இருந்தது, எது தடையாக இருந்தது எனபன் உட்பட பல்வேறு தகவல்கள் திரட்டப்படுகிறது. இந்த தகவல்கள் இறுதிப்படுத்தப்பட்டு மேலிடப்பார்வைக்கு அனுப்ப உள்ளனர். அதன்பிறகு நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்று கூறுகிறார்கள். சென்னையில் கட்சி தோல்வியுற்றதற்கான பிரதான காரணம் என்ன என்பது பற்றியும் தனியாக விசாரணை நடந்து வருகிறது.

No comments:

Post a Comment