Saturday 4 June 2016

குத்துச்சண்டை உலகின் முடிசூடா மன்னன் முகமது அலி மறைந்தார்...


உலகின் முடிசூடா குத்துச்சண்டை மன்னன் முகமது அலி இன்று அதிகாலை மறைந்தார். பர்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மூச்சுத்தினறல் காரணமாக அரிசோனா மாநிலம் பீனிக்ஸ் நகர மருத்துவமனியில் கடந்த வியாழனன்று அனுமதிக்கப்பட்டிருந்த முகமது அலி இன்று அதிகாலை காலமானார். அவரது உடல் அடக்கம் சொந்த மாநிலமான கெண்டகி லூயிஸ்வில்லேவில் நடக்க உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 

அமெரிக்காவின் சாதாரண கருப்பின குடும்பத்தில் பிறந்த ஆஷியஸ் கிளே பின்னாளில் இஸ்லாமியராக மதம் மாறி முகமது அலி என்ற பெயரை வைத்து கொண்டார். 1960 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டில் லைட் ஹெவி வெயிட் தங்கப்பதக்கம் வென்றவர் முகமது அலி .1964 ல் உலகின் ஹெவி வெயிட் குத்துச்சண்டை சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் மிகப்புகழ் பெற்றார் முகமது அலி. 1981 ஆம் ஆண்டு முகமது அலி ஓய்வு பெற்றார், அப்போது அவர் பங்கு பெற்ற பந்தயங்கள் 61 அதில் வெற்றி பெற்றிருந்தது 56 .
இல்லஸ்ட்ரேட் வீக்லி நூற்றாண்டின் இணையற்ற விளையாட்டு வீரர் பட்டத்தை அளித்தது, நூற்றாண்டின் சிறந்த விளையாட்டுக்கான அடையாளம் என பிபிசியும் முகமது அலிக்கு விருது வழங்கி கவுரவித்தன.

1960ல் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற கையோடு தொழில்முறை போட்டிக்கு வந்த அலி 1964ல்உலக ஹெவி வெயிட் குத்துச்சண்டை போட்டியை வென்றார். பின்னர் 1967 வரை அதை தக்கவைத்திருந்தார். 1974 முதல் 1978 வரையிலும், 1978, 1979 லிம் ஹெவி வெயிட் சாம்பியனாக இருந்தார்.

அலி பங்கேற்ற 61 போட்டிகளில் 56 போட்டிகளை வென்று சாதனை படைத்தார்.( அதில் 37 நாக் அவுட் , 19 போட்டி நடுவர்கள் முடிவுப்படி அறிவிக்கப்பட்டது) தோற்றது 5( 1 நாக் அவுட் , 4 நடுவர் பாயிண்டுகள் மூலம் அறிவிக்கப்பட்டது) அலியின் சிறப்பே அவர் வளையத்திற்குள் சுற்றி சுற்றி வந்து அடி வாங்காமல் எதிரியை களைப்பாக்கி விடுவார். கடைசியில் யாஅலீ என்று கத்தியபடி விடும் குத்து எதிரியை நாக் அவுட்டாக்கிவிடும். யாஅலி என்று கத்தகூடாது என்று ஆட்சேபித்த காலங்களும் உண்டு அலி அதை சட்டை செய்யவில்லை.

தன்னுடைய 22 வது வயதில் உலகஹெவி வெயிட்சாம்பியன் பட்டத்தை அலி வென்றார். வெல்ல முடியாதவராக கருதப்பட்ட பிரிட்டீஷ் பாக்சர் லிஸ்டனை அலி வென்றார். அந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு எதிராக கிளம்பியிருந்த நிறவெறி முகமது அலியையும் பாதித்தது. அவர் கிருஸ்துவ மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறினார். ஆஷியஸ் கிளே என்கிற அவரது பெயரை முகமது அலி என்று மாற்றிகொண்டார். அந்த காலகட்டத்தில் கருப்பின மக்களை பார்த்தது போல் இஸ்லாமிய கருப்பின மக்களை அமெரிக்கர்கள் பார்க்கவில்ல்லை என்பதும் ஒரு காரணம்.

1967 ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா வியாட்நாம் மீது படை எடுத்ததை எதிர்த்து முகமது அலி பேசி வந்தார். இதையடுத்து அவரது பட்டங்கள் பறிக்கப்பட்டது. அவருக்கு 4 ஆண்டு தடையும் விதிக்கப்பட்டது. 1971 ல் தடை விலக்கப்பட்டு அதே ஆண்டில் உலகப்புகழ் பெற்ற இரண்டு போட்டிகளில் வென்று தன் இழந்த புகழை நிலை நாட்டினார் அலி. அதன் பின்னர் 1980 லாரி ஹோம்ஸ் அலியை தோற்கடித்தார் ( அதன் பின்னர் ஒரு போட்டியில் அலி இவரை தோற்கடித்து வஞ்சத்தை தீர்த்துகொண்டார்). 1981 ஆம் ஆண்டு ட்ரெவன் பெர்பெரிக்கிடம் தோற்றார். இதையடுத்து அவர் சர்வதேச போட்டிகளிலிருந்து விலகினார். அதன் பின்னர் கடைசி காலங்களில் ஒருவகை நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டார் . வாய் பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

பின்னர் ஓய்வு எடுத்து வந்த அவர் மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்ப்ட்டு மரணமடைந்தார்.

No comments:

Post a Comment