Monday, 27 June 2016

திரையுலகத்தினர், திமுக நிர்வாகிகள் - 12000 பேர் அதிமுகவில் இன்று இணைகின்றனர்



ஈவிகேஎஸ் சகோதரர் இனியன் சம்பத் , நடிகர் பாக்கியராஜ் திமுக, மதிமுக முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 12000 பேர்  ஜெயலலிதா முன்னிலையில் இணைகின்றனர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததை அடுத்து அதில் இணைய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மதிமுக , தேமுதிக போன்ற கட்சிகளிலிருந்து திமுகவில் இணைந்தாலும் அதிமுகவில் இணைவதற்கே அனேக கட்சியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

காரணம் என்றாவது ஒருநாள் நிச்சயம் எதாவது ஒரு பதவி கிடைத்து விடும் என்ற எண்ணம் தான். அதிமுகவில் மட்டுமே புதியவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கிடைக்கிறது என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் வேரூன்றி உள்ளது. 

அதிமுக அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அசைக்க முடியாத கட்சி என்பதாலும், வலுவான எதிர்கட்சிகள் இல்லை என்பதாலும் இந்த எண்ணம் தோன்றி இருக்கலாம். மற்ற கட்சிகள் போலல்லாமல் அதிமுகவில் மட்டும் தான் இணைவதற்கு அனுமதி கேட்டு ஆண்டுக்கணக்கில் காத்திருப்போர் எல்லாம் உண்டு. 

இன்று காலை ராயபேட்டை அதிமுக தலைமை அலுவலகம் அருகில் இருக்கும் ஹேமா மாலினி திருமண மண்டபத்தில் இனியன் சம்பத், நடிகர் பாக்கியராஜ்  உள்ளிட்ட திரையுலகத்தினர் , திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் உட்பட 12000 பேர் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைகின்றனர்.

 நடிகர் பாக்கியராஜ் இதே போல் ஆண்டுக்கணக்கில் காத்திருந்து இன்று அவருக்கு இணைய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரசில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற இனியன் சம்பத்துக்கும் இன்று கட் சியில் இணைய வாய்ப்பு கிடைத்துள்ளது. திமுகவின் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் , மதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் நிர்வாகிகள் அதிமுகவில் இணைகின்றனர்.

டெய்ல் பீஸ்: இந்த இணைப்பு விழாவில் யார் யார் இணைகின்றனர் என்பதை ரகசியமாகவே வைத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் வெகு நாட்களாக அதிமுகவில் இணைய முயற்சித்து வருகிறார். ஆனாலும் அவரிடம் ஜெயலலிதா பாராமுகமாகவே நடந்து வருகிறார். அவர் எம்ஜிஆர் காலத்து ஆள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment