விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் கல்லூரியில் மாணவர் மர்மமாக இறந்து போனதாக சிபிசிஐடி விசாரணை கேட்டு தந்தை தொடர்ந்த வழக்கில் போலீசார் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாமண்டூரில் தேமுதிகவுக்கு தலைவர் விஜயகாந்துக்கு சொந்தமாக ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி உள்ளது.. இந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் எஞ்சினியரிங் பயின்ற பெரம்பலூர் பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியன் கடந்த ஏப்ரல் மாதம் மர்மான முறையில் இறந்து போனார். கல்லூரி தரப்பில் மின்சாரம் தாக்கி இறந்தாக கூறப்பட்டது.
உயிரிழந்த மாணவன் உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு முன் ஏப்ரல் 24 ம் தேதி தேமுதிக இளைஞர் அணி செயலாளர் சுதிஷ் அழைத்து பாமக விற்கு ஆதரவாக தேர்தலில் பிரச்சாரம் செய்தது குறித்து விசாரித்து மிரட்டியதாகவும் அதன் பின்னர் தான் கல்லூரி விடுதியில் தன் மகன் மர்மான முறையில் இறந்தாகவும் படாளம் காவல் நிலையத்தில் சிவசுப்பிரமணியத்தின் தந்தை ஸ்ரீலன் புகார் அளித்திருந்தார்.
மகன் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீலன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.என் பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மாணவன் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறை 4 வாரத்தில் வழக்கின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்

No comments:
Post a Comment