Monday 13 June 2016

பொதுமக்களுக்கு இடையூறு அளித்த வாலிபர்களை பிடித்த எஸ்.ஐ மூக்கு உடைப்பு- நடவடிக்கை எடுக்க மறுத்த இன்ஸ்பெக்டர்



சென்னை அபிராமபுரம் லிமிட்டில் மோட்டார்பைக்கில் இரும்பு ராடை வைத்து பொதுமக்களை அச்சுறுத்திய இரண்டு வாலிபர்களை  தீரத்துடன் போராடி ஸ்டேஷன் கொண்டு வந்த  எஸ் .ஐ  முகத்தில் குத்துவிட்டு மூக்கை உடைத்த வாலிபர்களை கைது செய்யாமல இன்ஸ்பெக்டர் அனுப்பி வைத்துள்ளார்.

திருவான்மியூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருப்பவர் தமிழன்பன். இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து அடையாறு வழியாக வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது இவருக்கு முன்னாள் குடி போதையில் இரண்டு வாலிபர்கள் கையில் இரும்பு ராடுடன் பொதுமக்களை தாக்குவது போல் அச்சுறுத்தியபடி சென்றுள்ளனர். இதை பார்த்து அவர் அந்த வாலிபர்களை தடுத்து நிறுத்தினார். 

அவரையும் அந்த வாலிபர்கள் இரும்பு ராடால் தாக்கியுள்ளனர். வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளனர். 
அவர்களுடன் கடுமையாக போராடி ப்பொதுமக்கள் உதவியுடன்  எஸ்.ஐ தமிழன்பன் 100 க்கு போன்செய்து அபிராமபுரத்திலிருந்து பேட்ரால் வாகனத்தை வரவழைத்து இரண்டு பேரையும் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றுள்ளார். ஸ்டேஷன் வாசலில் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ஒருவன் பெயர் முகமது அனாஸ்(24), இன்னொருவன் பெயர் சபி அகமது(25)பெரம்பூரை சேர்ந்தவர்கள் எனபது தெரியவந்தது.



ஸ்டேஷன் வாசலில் சக போலீசாருடன் பேசிக்கொண்டிருந்த தமிழன்பனை முகமது அனாஸ் திடீரென முகத்தில் ஓங்கி குத்த மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது.உடனடியாக அவரை போலீசார் ராயபேட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.  சிகிச்சைபெற்ற அவர் முறைப்படி அந்த இரண்டு இளைஞர்கள் மீதும் புகார் அளித்துள்ளார். இரும்பு ராடையும் ஒப்படைத்துள்ளார், ஆனால் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பிரபு அந்த இரண்டு இளைஞர்களையும் வழக்கு எதுவும் போடாமல் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார். 



இது பற்றி தமிழன்பன் கேட்டபோது வினோதமான பதில் ஒன்றை சொன்ன ஆய்வாளர் பிரபு ரொம்ப வலியுறுத்தினால் உன் மீது தான் எஃப்.ஐ.ஆர் போடுவேன் என மிரட்டி அனுப்பி உள்ளார். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பணி முடிந்து வீடு செல்லும் நிலையிலும் போக்கிரிகளை  உயிரை பணயம் வைத்து பிடித்து ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து போலீசார் முன்னிலையிலேயே தாக்கப்பட்டு காயமடைந்த எஸ்.ஐ மீதே எஃப்.ஐ ஆர் போடுவேன் சொன்ன அந்த இன்ஸ்பெக்டர் பிரபுக்கு மெச்சத்தகுந்த பணிக்கான இந்த ஆண்டு மெடல் கட்டாயம் வழங்க வேண்டும் என போலீசார் நொந்து போய் பேசிக்கொள்கிறார்கள். 

இது பற்றி தமிழன்பனிடம் பேசிய போது, வேண்டாம் சார் இந்த மேட்டரை இத்தோடு விட்டு விடுங்கள் இல்லாவிட்டல் என் மீதே மீண்டும் நடவடிக்கை எடுப்பார்கள் எனக்கு இது வேணும் என்று தழுதழுத்த குரலில் சொல்லிவிட்டு சென்றார். பல்வேறு தீரச்செயல்களில் ஈடுபடுபவர்களை கூப்பிட்டு கவுரவிக்கும் காவல் ஆணையர் ராஜேந்திரன் தமிழன்பனுக்கு உரிய மரியாதையை அளிப்பாரா?

No comments:

Post a Comment