Saturday 25 June 2016

சென்னை முழுதும் ரவுடிகளை பிடிக்க உத்தரவு -நேற்றிரவு முதல் தொடங்கியது



சென்னையில் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளது மக்களை பீதிக்குள்ளாக்கி உள்ளது. 24 மணி நேரத்தில் 8 கொலை , கூலிப்படை  கொலை அதிகரிப்பு, செயின் பறிப்பு , வழிப்பறி என்றெல்லாம் கிரிக்கெட் ஸ்கோர், தங்க நிலவரம் எழுதுவது போல் பத்திரிக்கைகள், ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது.

அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கூலிப்படை கொலைகள்  செயலை கண்டித்துள்ளனர். போலீசாரின் அளவுக்கதிகமான பணிச்சுமையும், போலீசாரை அவர்கள் பணியை செய்ய விடாமல் விஐபி பாதுகாப்பு  மற்றும் மற்ற பணிகளுக்கு பயன் படுத்துவதும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

சென்னையில் நடக்கும் கொலை, கொள்ளை ,திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் கமிசனர் அலுவலக அதிகாரிகளையே அசைத்துள்ளது. என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை நடத்தும் அளவுக்கு வந்துள்ளனர்.இதன் விளைவு தான் கமிஷனரின் புதிய திட்டம் ரவுடிகள் வேட்டை.


நேற்று இரவு முதல் இது தொடங்கி விட்டதாக போலீஸ் தரப்பில் கூறுகின்றனர். பொதுவாக சென்னை முழுதும் குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரவுடிகளை, கூலிப்படையினரை, கொலைக்குற்றவாளிகளை பிடிக்க கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். நேற்றிரவு முதல் மைக் மூலம் துணை ஆணையர்கள் அனைத்து ஸ்டேஷன் போலீசாரையும் இதற்கான நடவடிக்கைக்கு முடுக்கி வருகின்றனர்  .

பொதுவாக குற்றவாளிகளில் பட்டியல் குற்றவாளிகள் என்பார்கள். தொடர் குற்றங்களில் ஈடுபட்டு அடிக்கடி மாமியார் வீட்டுக்கு போகிறவர்களை அவ்வாறு குறிப்பிடுவார்கள். இவர்களின் பட்டியல் எடுக்கப்படுகிறது. இவரகளில் கொலைகுற்றவாளிகள் , கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள், வழிப்பறி, ரவுடியிசம், கூலிப்படையினராக செயல்படுபவர் மூன்று வகையாக தரம் பிரிப்பார்கள் . 

தண்டனை அல்லது ஜாமீன் பெற்ற பின்னர் வாழும் குற்றவாளிகளில் ஓவி எனப்படும் (அவுட் ஆஃப் வியூ )போலீசார் கண்காணிப்பில் இல்லாமல் வாழும் குற்றவாளிகள், கண்காணிப்பில் உள்ளவர்கள், அதில் செயல்பாட்டில் உள்ளவர்கள் , இல்லாதவர்கள், ஒழுங்காக திருந்தி வேலை செய்பவர்கள் என்ற பட்டியல் இருக்கும்.

இப்படிபட்டவர்களை தற்போது பிடிக்கும் படி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இதனால் சென்னை முழுதும் ரவுடிகள் ,கூலிப்படையினரை , முன்னாள் குற்றவாளிகளை கைது செய்யும் பணி துவங்கி உள்ளது. முன்பு ஜார்ஜ் இருந்த போது ஒரே ஆண்டில் 1800 பேர் வரை குண்டர் சட்டத்தில் பலரையும் கைது செய்தார்.

 மூன்றாண்டுகளாக இது தொடர்ந்தது. அதன் பின்னர் மீண்டும் அவர்களை தற்போது சிறையில் பல்வேறு சட்ட சிக்கல்கள் உள்ளன. ஆனால் அதையும் பிரச்சனை தீவிரமடைந்துள்ளதால் இது போன்ற குற்றவாளிகள் சென்னைமுழுதும் வேட்டையாடும் பணி துவங்கியது. அவர்களை சிறையில் அடைக்கும் பணியும் துவங்கும். இதற்காக அங்காங்கு உள்ள ஸ்டேஷன்களுக்கு கட்டளை சென்றுள்ளது.



குதிரை போன பிறகு லாயத்தை பூட்டிய கதை போல் இந்த பிரச்சனை ஆகிவிட் கூடாது என்பதே அனைவரின் விருப்பம்

No comments:

Post a Comment