Sunday, 26 June 2016

சென்னை முழுதும் கமிஷனர் இரவு ரோந்து


சென்னையில் நேற்று இரவு கமிஷனர் ரோந்து பணியில் ஈடுபட்டார். சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே. ராஜேந்திரன் நேற்றிரவு  கோயம்பேடு, அரும்பாக்கம், கீழ்ப்பாக்கம், சென்ட்ரல், பாரிமுனை, ராயபுரம், காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர், மணலி, புழல், மூலக்கடை, கொடுங்கையூர், எம்கேபி நகர், வியாசர்பாடி, பேசின்பிரிட்ஜ், புளியந்தோப்பு, ஓட்டேரி, பெரம்பூர், செம்பியம், அயனாவரம், வில்லிவாக்கம், பாடி, அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட், ஜெஜெ நகர் ஆகிய இடங்களுக்கு இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சென்று இரவு ரோந்து பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்.
மேலும், புழல், கொடுங்கையூர், வியாசர்பாடி ஆகிய காவல் நிலையத்தில் நுழைந்து பணியில் இருந்தவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

No comments:

Post a Comment