Saturday 18 June 2016

சத்யபாமா கல்வி குழும தலைவர் ஜேப்பியார் மரணம் - மிசாவிற்கு முன்னர் மிசாவில் அடைக்கப்பட்டவர்


சத்ய பாமா கல்விகுழும தலைவரும் முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளருமான ஜேப்பியார் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 85.

கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தை சேர்ந்தவர் ஜேப்பியார்.  எம்ஜிஆர் அதிமுகவை துவங்கிய போது எம்ஜிஆருடன் கட்சிப்படிவத்தில் இருந்த பெயர்களுல் ஜேப்பியார் பெயரும் ஒன்று. இவர் 1972ல் எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பித்தவுடன் அவரை சந்தித்துப் பேசி அண்ணா திமுக கட்சியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது வயது 33. 1973ல் தென் சென்னை மாவட்டச் செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது.  அரசியலில் மிகவும் சுறுசுறுப்பானவர். சென்னை மாவட்டத்தில் கட்சியை வளர்த்ததில் இவருக்கு முக்கிய பங்குண்டு. 1973ல் திண்டுக்கல் இடைத் தேர்தலின் போது பிரச்சாரத்தில் எம்ஜிஆருடன் முழுமையாக ஈடுபட்டவர். எம்ஜிஆர் இவரை வெளியூர்களுக்கு கூடவே அழைத்துச் செல்வதும் உண்டு. அப்போதைய சென்னை மாவட்டம் திமுகவின் கோட்டை. அதிமுகவால் அரசியலே செய்ய முடியாமல் இருந்த நேரம். ஆனாலும் மாவட்ட செயலாளர் என்ற முறையில் ஜேப்பியார் சிறப்பாக பணியாற்றினார். 1975ல் ஜேப்பியார் மீது வழக்கு போட்டு  ஒரு வருடத்திற்கு ஜாமீனில் வெளியே வர முடியாதபடி மிசா சட்டத்தில் அடைக்கப்பட்டார்.

எம்ஜிஆர் கட்சி நிர்வாகிகளை சிறைக்கு தினமும் சென்று ஜேப்பியாரை பார்த்துவர சொல்வார்.மனைவியும், 10 வயதிற்குள் இருக்கும் இரண்டு பெண் குழந்தைகளுக்கும்  வேண்டிய உதவிகளையும், பாதுகாப்பையும் எம்ஜிஆரே  நேரடியாக கவனித்து வந்தார்.
 1976 அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மிசா சட்டத்தை கொண்டு வந்தார். திமுகவினர் சிறையில் அடைக்கப்பட்டனர்.சிறையில் இருந்த ஜேப்பியார் விடுதலை ஆனார். எம்ஜிஆரே நேரடியாக சிறைக்கு சென்று அழைத்து வந்தார்.

1973 திண்டுக்கல் இடைதேர்தலில் எம்ஜிஆருடன் வேனில் ஜேப்பியார்


1977 சட்டமன்ற தேர்தலில் எம்ஜிஆருடன் தமிழகம் முழுதும் ஜேப்பியார் பிரச்சாரத்திற்கு உடன் சென்றார். அதிமுக ஆட்சி அமைந்த பிறகு குடிநீர் வாரிய தலைவராக ஜேப்பியாரை நியமித்தார். பின்னர் எம்.எல்.சி ஆன ஜேப்பியார் , மேலவை கொறடாவாகவும் செயல்பட்டார். எம்ஜிஆரின் மறைவுக்கு பின்னர் ஜானகி எம்ஜிஆரின் பிரிவுக்கு சென்றவர் பின்னர் நிரந்தரமாக அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு எம்ஜிஆரின் தாயார் பெயரில் அன்னை சத்தியபாமா பொறியியல் கல்லூரி துவக்கினார். சமீபத்தில் வயோதிகம் காரணமாக உடல்நலம் குன்றியிருந்த அவர் நேற்று ம

ருத்துவமனையில் உயிரிழந்தார்.

No comments:

Post a Comment