Monday 6 June 2016

வழக்கறிஞர்கள் போராட்டம் -- என்ன சொல்கிறது சட்டத்திருத்தம்


நீதிமன்றங்களில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வழக்கறிஞர் கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் வழக்கறிஞர் சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிக்கை கடந்த மே 25 முதல் அமலுக்கு வந்துள்ளது.
2009-ல் விபத்து வழக்கு ஒன்றில் ஒழுங்கீனமாக நடந்த வழக்கறிஞருக்கு எதிரான தீர்ப்பில் கருத்து கூறிய உச்ச நீதிமன்றம், வழக்கறிஞர் சட்டம் 34-வது பிரிவின்படி நீதிமன்றங்களுக்குள் தவறு இழைக்கும் வழக்கறிஞர்களை தண்டிக்க விதிகளை வகுக்குமாறு அனைத்து உயர் நீதிமன்றங்க ளுக்கும் உத்தரவிட்டது. 
வழக்கறிஞர் சட்டப்பிரிவு 34 (1) வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அந்த சட்ட விதி களில் கீழ்க்காணும் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

பிரிவு 14ஏ - தடை செய்யும் அதிகாரம்:
நீதிபதியின் பெயரைக் கூறி பணம் பெறுவது, நீதிமன்ற உத்தரவுகள், ஆவணங்களை திரிப்பது, நீதிபதி அல்லது நீதித்துறை அதிகாரிக்கு எதிராக தகாத வார்த்தைகளை பயன்படுத் துவது, நீதிபதிகள் மீது ஆதார மற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி மேல் நீதிமன்றங்களிடம் புகார் அளிப்பது, நீதிமன்ற வளாகம், நீதிமன்ற அறைக்குள் போராட்டம் நடத்துவது, மது அருந்திவிட்டு நீதிமன்ற அறைக்குள் நுழைவது ஆகியவற்றில் ஈடுபட்டால் உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதி மன்றங்களில் ஆஜராக நிரந்த ரமாக அல்லது நீதிமன்றம் முடிவு செய்யும் காலம் வரை தடை விதிக்கப்படும்.
14பி - நடவடிக்கை எடுக்கும் அதிகாரம்:
விதி 14-ஏ-யில் கூறப்பட் டுள்ள ஒழுங்கீன நடவடிக்கை யில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவும், அவர்களை உயர் நீதிமன்றம், அனைத்து கீழமை நீதிமன்றங்களில் ஆஜராவதற்கு தடை விதிக்கவும் உயர் நீதிமன்றத் துக்கு அதிகாரம் உள்ளது.
அதேபோல, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங் களில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முதன்மை அமர்வு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது.


கீழமை நீதிமன்றத்தில் வழக் கறிஞர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால், கீழமை நீதிமன்றம் இதுகுறித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திடம் அறிக்கை அளிக்க வேண்டும். மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வும், தடை விதிக்கவும் அதிகாரம் உள்ளது.
14சி - பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்:
நடவடிக்கை எடுக்கும் முன்பு, முதலில் நேரில் ஆஜராகச் சொல்லி வழக்கறி ஞர்களுக்கு உயர் நீதிமன்றம், மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்ற நீதிபதிகள் சம்மன் அனுப்ப வேண்டும்.
இடைக்கால உத்தரவு
14டி - இடைக்கால உத்தரவு பிறப்பிக்க அதிகாரம்:
விசாரணை நிலுவையில் இருக்கும்போது, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் களுக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் கருதும் வழக்குக ளில், இடைக்கால தடை விதிக்க இந்த சட்டப்பிரிவு வழிவகை செய் கிறது.
தமிழக அரசிதழில் வெளியிடப் பட்டுள்ள இந்த அறிவிக்கை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
நீதித்துறைக்கு எதிராக செயல் படும் வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் மட்டுமே தடை விதிக்க முடியும் என்ற நிலை இருந்தது. இந்த புதிய அறிவிக்கை மூலமாக, உயர் நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்களுக்கும் அந்த அதிகாரம் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
இதை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர்கள் இன்று பேரணி நடத்துகிறார்கள்.

No comments:

Post a Comment