Monday 20 June 2016

அமெரிக்க அதிபரின் ஏர்பஸ் போல் மோடிக்கும் சிறப்பு விமானம்



அமெரிக்க அதிபர் பாதுகாப்புக்காக அதி நவீன சிறப்பு விமானம் செயலப்டுவது போல் பிரதமர் மோடிக்கும் அதிநவீன பாதுகாப்பு விமானாத்தை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அதி நவீன  சிறப்பு விமானம் பயன் படுத்தப்படுகிறது. ஏர்பஸ் என்று அழைக்கப்படும் தனிச்சிறப்பு விமானத்தில் தான் பயணம் செய்வார். அதி நவீன வசதிகள், பாதுகாப்பு, மருத்துவ வசதி கொண்ட இதே விமானம் போல் பிரதமர் மோடிக்கும் அதி நவீன விமானங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.


எதிரிகளின் தாக்குதல்களை முறியடிப்பதற்கான நவீன கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் புதிய விமானங்கள் இருக்கும்.

போயிங்777 என அழைக்கப்படும் இத்தகைய  விமானங்களில் செயற்கைகோள் தொலைதொடர்பு சாதனங்கள், அவசர கால தொலைதொடர்பு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த தொலைதொடர்பு தகவல்களை இடைமறித்து கேட்க முடியாத அளவு நவீன பாதுகாப்பு கொண்டதாக இருக்கும்



 பிரதமர் மோடிக்கு வாங்கப்படும் விமானங்கள் ஏவுணை மற்றும் கையேறி குண்டு தாக்குதல்களை முறியடிக்கும் திறன் கொண்ட, ஆன்ட்டி மிஸைல் டிஃபென்ஸ் சிஸ்டம் கொண்டது. மேலும், ஏவுகணைகள் வருவதை முன்கூட்டியே கண்டறிந்து தடுத்து நிறுத்துவதற்கான ரேடார் மற்றும் இடைமறித்துதாக்கும்ஏவுகணைகளும் பொருத்தப்பட்டிருக்கும்.

அவசர காலங்களில் வானிலேயே எரிபொருள் நிரப்பும் வசதியையும் இந்த விமானங்கள் கொண்டிருக்கும். இதனால், தரையிறங்காமல் நீண்ட தூரம் பறக்க முடியும். தற்போது பயன்பாட்டில் உள்ள போயிங் 747 விமானங்கள் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் அதிகபட்சமாக 9,800 கிமீ தூரம் வரைதான் பறக்க முடியும். ஆனால், புதிய போயிங் 777-300 விமானம் 14,594 கிமீ தூரம் வரை பறக்கும். 


அவசர கால பயன்பாட்டிற்காக, இந்த விமானங்களில் சிறிய அறுவை சிகிச்சை அரங்க இயங்க கூடிய மருத்துவமனை, ஆலோசனைக்கூடம், கேளிக்கை வசதிகளுடன் கூடிய அரங்கமும் இருக்கும். இந்த போயிங் விமானத்தை வாங்க அடுத்த மாதம் கூட உள்ள பாதுகாப்பு துறைக்கான கொள்முதல் கூட்டத்தில் முடிவு செய்ய உள்ளதாக தெரிகிறது.

No comments:

Post a Comment