Monday, 27 June 2016

காவல்துறை காலிபணியிடங்களை ஏன் நிரப்பவில்லை உயர்நீதிமன்றம் பத்து கட்டளையுடன் கேள்வி



கம்ப்யூட்டர் என்ஜினியர் ஸ்வாதி கொலை வழக்கு நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் குறித்த எந்த தகவலும் இதுவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. தமிழகம் முழுதும் கூலிப்படைகள் கொலை சம்பவங்களில் ஈடுபடுவது பெரிதாகி வருகிறது.

இந்நிலையில் ஊடகங்களில் சமூக வலை தளங்களில்  ஸ்வாதி பிரச்சனையும் , சட்டம் ஒழுங்கு குறித்த விவாதங்களும் பெரிதாக எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்வு பற்றி நீதிமன்றத்திற்கு 10 கேள்விகள் அடங்கிய கடிதத்தை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கடிதம் எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தில் உள்ள அம்சங்கள் வருமாறு:

 1.அறிவியல் வளர்ச்சி இவ்வளவு தூரம் வளர்ந்துள்ள நிலையில், அதை முழுமையாக பயன்படுத்தி பொதுமக்களுக்கான பாதுகாப்பு ஏன் உறுதி செய்யப்படவில்லை

2. தேவையான உபகரணங்களுடன் ரகசிய கண்காணிப்பு கேமிராக்களை ஒருங்கிணைக்கும் நவீன கட்டுப்பாட்டு அறை அமைக்கை ஏன் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை

3. இதுவரை எத்தனை இடங்களில் கேமிராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது

4. இன்னும் எத்தனை இடங்களில் கேமிராக்கள் பொறுத்தப்பட வேண்டியுள்ளது

5. எவ்வளவு காலத்தில் நிதி ஒதுக்கப்பட்டு, அவை பொறுத்தப்படும்

6. நாளுக்கு நாள்  அதிகரித்துவரும் குற்ற சம்பவங்களை தடுக்க காவல்துதறையும், பாதுகாப்பு படைகளும் அவசியம் என்பது தெரிந்தும் ரயில்வே மற்றும் காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப மத்திய, மாநில அரசுகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை 

7.நாடுமுழுதும் உள்ள சிசிடிவி பதிவுகளை ஒருங்கிணைத்து ஏன் ஒரு காவல்துறை நவீன காவல்துறை கட்டுப்பட்டறையை உருவாக்க கூடாது

 8.சாலைகளில்போக்குவரத்து துறைக்கு உள்ளது போல் அதி நவீன உயர்தர கேமராவை அமைக்ககூடாது.

 9.தனியார் நிறுவனங்கள்  , கார்பரேட் நிறுவனங்கள், பெரும் தொழில் நிறுவனங்களுடன் சேர்ந்து ஏன் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க கூடாது. பன்னாட்டு நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகிற பொறுத்தமான நபர்களை அவர்களுக்கு ஓய்வான நேரங்கள் உதவ ஏன் கேட்க கூடாது. மத்திய மாநில அரசுகள் இதை பரிசீலிக்க வேண்டும்.

 10. 2013 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் கொண்டுவரப்பட்டது போல் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு ஏன் தேசிய அளவிலான ஒருங்கிணைந்த திட்டமாக கொண்டு வரக்கூடாது.

இந்த கடிதத்தை தலைமை நீதிபதியிடம் உயர்நீதிமன்றம் சார்பில் காட்டப்பட்டது. உடனடியாக அதன் அமசங்களை ஏற்றுகொண்ட தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் அமர்வு தானாக முன் வந்து இந்த வழக்கை கையிலெடுத்து நான்கு வார காலத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment