Wednesday 8 June 2016

சட்டதிருத்தத்துக்கு எதிரான போராட்டம் உருவானது வழக்கறிஞர் குழு - சனிக்கிழமை திருச்சியில் கூட்டம்



சமீபத்தில் கொண்டுவரப்பட்ட வழக்கறிஞர் சட்டத்திருத்தத்துக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களது சுதந்திரத்தை இந்த சட்டம் பாதிப்பதாகவும்,சட்டத்திருத்தம் குறித்து வழக்கறிஞர் சங்கங்களுடன் ஆலோசிக்கவில்லை இந்த சட்டம் அடிப்படை உரிமைகளை பறிப்பதாக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துகின்றனர். கடந்த 6 ஆம் தேதி தமிழகம் முழுதுமிருந்து வழக்கறிஞர்கள் சென்னையில் பேரணி நடத்தினர். அதில் ஒருங்கிணைந்த குழு உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

 அதனடிப்படையில் அனைத்து சங்கங்களின் தலைவர்கள், பார் கவுன்சில் உறுப்பினர்கள், சென்னையில் உள்ள சில மூத்த வழக்கறிஞர்கள், முக்கிய வழக்கறிஞர்கள் அடங்கியதாக இக்குழு இருக்கும் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம் , ஒற்றுமையாக இனி முடிவெடுப்போம், ஒரே குரலில் இனி எங்கள் கருத்து இருக்கும், தொழில் சுதந்திரத்தை பாதிக்கும் சட்டத்தை தூக்கி எறிவோம் என உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் பால்கனகராஜ் தெரிவித்தார். மேலும் இந்த குழு வரும் 11 ஆம் தேதி திருச்சியில் கூடி தங்கள் முடிவை அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார்.


இதனிடயே தமிழகம் புதுவை பார் கவுன்சில் தலைவர் செல்வம் புதிய சட்டத்திருத்தம் வழக்கறிஞர்களை எந்த வகையிலும் பாதிக்காது என தலைமை நீதிபதி தெரிவித்ததாகவும், புதிய சட்டத்தை மறுபரிசீலனை செய்யும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என தலைமை நீதிபதி உறுதியளித்ததாக தெரிவித்துள்ளார். வழக்கறிஞர்கள் தங்கள் கருத்துக்களை வரும் 17 ஆம் தேதிக்குள் பார்கவுன்சிலில் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டுள்ளார்.

No comments:

Post a Comment