Tuesday 7 June 2016

இயற்கை வளக் கொள்ளை சிபிஐ விசாரிக்க வேண்டும் - முத்தரசன் கோரிக்கை

இயற்கை வளக் கொள்ளை குறித்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கோரிக்கை வைத்துள்ளார். 


இது குறித்த அவரது அறிக்கை;

             
  மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்துள்ள கிரானைட் முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் விசாரணையில் உள்ளது. இதில் உயர்நீதிமன்றம் அமைத்த உ.சகாயம் ஐஏஎஸ் தலைமையிலான விசாரணை ஆணையம் கிரானைட் முறை கேடுகளால் அரசுக்கு ரூ 1 லட்சத்து 11 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பாதத் தெரிவித்துள்ளது. இந்த முறைகேடுகள் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்திருப்பதாலும், உயர்நிலை அலுவலர்கள் பலர் சம்மந்தப்பட்டிருப்பதாலும்,அரசியல் செல்வாக்குள்ளோர் லாபம் அடைந்திருப்பதாலும், இவையாவற்றிக்கும் மேலாக வழக்கில் அரசின் மீதும் குற்றச்சாட்டிருப்பதால் கிரானைட் தொடர்பான வழக்குகளை மத்திய புலனாய்வு துறை விசாரணைக்கு ஒப்படைப்பது அவசியம் என்பதையும், மதுரை மாவட்டத்துக்கும் வெளியே தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நடைபெற்றுள்ள மணல், தாது மணல்,கிரானைட் முறைகேடுகள் தொடர்பான வழக்குகளையும் மத்திய புலனாய்வு துறை ஒருங்கிணைத்து விசாரிப்பது அவசியம் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கோருகிறது.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளர்.      

No comments:

Post a Comment