கழிவறை என்பது அத்யாவசியம் என்பது தற்போது எல்லா இடத்திலும் ஒரு கோஷமாகவே மாறிவருகிறது. இதில் காவல் பணியில் இருப்பவர்களுக்கு கழிவறை என்பது மிக முக்கியமான தேவை. ஆனால் அவர்கள் பணி புரிவதோ பாதுகாப்பு பணியில் . காவலர்களுக்கும் மற்ற அரசு பணியில் இருப்பவர்களுக்கும் வித்யாசமே அதுதான்.
பணியில் உள்ள காவலர்கள் குறிப்பாக பெண்காவலர்கள் நிலையை கருத்தில் கொண்டு தற்போது தமிழக காவல்துறையில் நடமாடும் கழிப்பறை வாகனத்தை காவல்துறையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இது போன்ற வாகனங்கள் நடைமுறையில் உள்ளதே என்ற கேள்வி எழலாம். ஆனால் அவைகள் தனியாக இழுத்து வரபட்டு நிறுத்தப்படும். இவைகளை ஒரு இடத்தில் கொண்டு வந்து நிறுத்துவதற்கே சிரமமாக இருக்கும். கழிவறை என்பது தனியாக தெரியும். இதனால் பயன்படுத்துபவர்கள் தயக்கமடைய வாய்ப்புண்டு.
தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள வாகனம் சொகுசு பேருந்து போன்ற தோற்றத்துடன் உள்ளது. சொகுசு பேருந்து போல் இருக்கும் இந்த வாகனத்திற்குள் நவீன கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதை போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்களில் நிறுத்துவதும் எளிது. பயன்படுத்துபவர்களும் தய்க்கமின்றி பயன்படுத்துவர். இந்த வாகனங்கள் தற்போது தென்மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் தமிழகம் முழுதும் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த அருமையான திட்டத்தை வடிவமைத்து தமிழக காவல்துறைக்கு அனுப்பி நடைமுறைக்கு கொண்டு வந்த முழு பெருமையும் மதுரை புற நகர் மாவட்ட எஸ்பி விஜேந்திர பிடாரியை சாரும் என போலீஸ் வட்டாரத்தில் பேசிக்கொள்கின்றனர்.




No comments:
Post a Comment