Tuesday 28 June 2016

ஸ்வாதி கொலை வழக்கு - விளக்கம் கேட்கிறது தேசிய மகளிர் ஆணையம்



நுங்கம்பாக்கம் ரயில்  நிலைய நடைமேடையில் கொடூரமாக கொல்லப்பட்ட கம்ப்யூட்டர் என்ஜினியர் ஸ்வாதி கொலை வழக்கு தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு  சரியில்லை என அரசியல் கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. சமூக வலைதளங்களில், ஊடகங்களில்  ஸ்வாதியின் மரணம் பரபரப்பான விவாத பொருளாகியுள்ளது. 

உயர்நீதிமன்றமும் தனது பங்குக்கு விளக்கம் கேட்டுள்ளது. இந்நிலையில் இந்த பிரச்சனையை தேசிய மகளிர் ஆணையம் கையிலெடுத்து உள்ளது. இந்த விவகாரத்தில் தானாக முன் வந்து வழக்கை கையிலெடுத்த மகளிர் ஆணையம், ஸ்வாதி கொலைகுறித்து என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது, பாதுகாப்பு அம்சத்தில் உள்ள குறைபாடுகள் , என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்பது குறித்து சட்டம் ஒழுங்கு டிஜிபி , ரயில்வே பொது மேலாளர் ஆகியோர் விரைவாக பதிலளிக்கும் படி கேட்டுள்ளது.

இது குறித்து விரைவில் ஆய்வு செய்து தேசிய மனித  உரிமை ஆணையம் பரிந்துரை அளிக்கும். மேலும் விரைவில் தேசிய மனித உரிமை ஆணையர் லலிதா குமாரமங்கலம் நேரில் ஆய்வு நடத்த வர உள்ளார். 

இதே போல் மாநில மனித உரிமை ஆணையமும் காவல்துறை ஆணையர், ரயில்வே ஐஜி, உள்ளிட்டோருக்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் வழங்கி உள்ளது.

No comments:

Post a Comment