Tuesday 28 June 2016

பேசிக்கிறாங்க .. கழற்றி விட்ட மேடம்


தம்பி வாங்க எங்க ஆளையே காணோம் , இல்லண்ணே கொஞ்சம் சொந்த வேலை அதான் என்றேன். போ என்ன வேலையோ அருமையான கல்யாணத்த மிஸ் பண்ணிட்டே என்றார் அந்த அண்ணன்.

என்ன கல்யாணம் அண்ணே எனக்கு அழைப்பு வராம நான் எப்படி போகமுடியும் என்றேன். தம்பி இது பெரிய இடம் பெரிய இடம்னா அவ்வளவு பெரிய இடம். அதுல பல பெரிய மனிதர்கள் வருவார்கள் அதுதான் நமக்கு செய்தி சிலர் ரகசியமா வருவாங்க அதுவும் நமக்கு செய்திதான்.


 அப்படி யாருண்ணே அந்த பெரிய மனிதர்? பெரிய மனிதர் அல்ல மனுஷி. ரொம்ப பவர்ஃபுல் லேடி , ஆலோசனை எல்லாம் சொல்வாங்க . என்னமோ தெரியல இவங்களுக்கு அடிமேல் அடியாவே விழுது. என்னண்ணே சொல்றீங்க அவங்களுக்கும் பிரச்சனையா? ஆமாப்பா அந்தம்மா வீட்டு கல்யாணத்துக்கு ஊருக்கெல்லாம் பத்திரிக்கை வச்சாங்க , சிஎம்முக்கும் வச்சாங்க .

ஆனால் கல்யாணத்துக்கும் சிஎம் வரல, மாலை ரிஷப்ஷனுக்கும் வரலையாம். ஒரு காலத்துல காதுகுத்துக்கு கூட வருகிற அளவுக்கு நெருக்கமான சிஎம் இப்ப ஏன் இப்படி சுத்தமா ஒதுக்கிட்டாங்கன்னுதான் இப்ப ஆலோசனைக்கு மனசு வருத்தமாம். அப்படி என்ன தான் பிரச்சனை சி.எம். வராம புறக்கணிக்கும் அளவுக்கு?

அப்படி கேளு சொல்றேன். இவங்க ஆளு ஒருத்தர் சிட்டியில ரொம்ப வருஷமா பெரிய பொறுப்புல இருந்தாரு. மன்னர் மாதிரி வாழ்ந்தாரு ஆனால் ஒரு பெரிய சறுக்கல் வெளியே அனுப்பிட்டாங்க. அதுக்கு பிறகு இந்த மேடம் காவல்துறை உச்ச அதிகாரியோட கைகோர்த்தாங்க. நல்லா தான் போய்கிட்டு இருந்துச்சு. இவங்க தலையீடு எந்த அளவுக்கு இருந்ததுன்னா இவங்க வேட்பாளரை செலக்ட் செய்யுமளவுக்கு போச்சு.

ஆனால் இவங்க ஒரு தப்புக்கணக்கு போட்டாங்க ஆசை யாரை விட்டது. தேர்தல் நெருக்கத்தில் சில ஐபிஎஸ்கள் குறிப்பாக அந்த உச்ச அதிகாரி சொன்னதை கேட்டு கைகோர்த்து எதிர்முகாமுக்கு தூது போனாங்க. அப்புறம் வேண்டிய தகவல்களை எல்லாம் சொன்னாங்க. தேர்தலுக்கு பிறகு உச்ச அதிகாரி மாட்டினார் , அப்படியே நூல் பிடிச்சா இவங்கிட்ட வந்து நிக்குது.

அச்சச்சோ அப்புறம்.., அப்புறம் என்ன அன்னையிலிருந்து அந்தம்மாக்கு இறங்கு முகம் தான். இவரு லிங்க்ல இருந்த உச்ச ஐஏஎஸ் ஒருவரையும் தூக்கி அடிச்சாங்க, இப்படி படிப்படியா நடவடிக்கை, நட்டு போல்டு கழற்றுகிற மாதிரி கழற்றி விட்டுட்டாங்க. நேத்து கல்யாணத்துக்கும் சிஎம் வராததால பகீரங்கமா தெரிஞ்சு போச்சு.

 இப்ப அமைச்சர்கள், கட்சிக்காரர்கள் , அதிகாரிகள் எல்லோரிடமும் இதுதான் ஹாட் டாபிக் . என்னண்ணே திடீர்னு இங்கிலீசு, சந்தோஷமா இருந்தா வரும் நீ கிளம்பு அடுத்த வேலைய பார்ப்போம். அண்ணாச்சி கிளம்பி போய்விட்டார்.

No comments:

Post a Comment