Monday 20 June 2016

குழந்தை கடத்தலை தடுக்க - காவல்துறையில் தனிப்பிரிவு, ரூ.1 லட்சம் இழப்பீடு உயர்நீதிமன்றம் உத்தரவு



குழந்தைகள் கடத்தலை தடுக்க விஞ்ஞானபூர்வமாக தடுக்கவும் , காவல்துறையில் தனிப்பிரிவு துவக்க உயர்நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது. 

சென்னை பாரிமுனை மற்றும் வால்டாக்ஸ் சாலையில் குழந்தைகள் காணாமல் போனது குறித்த ஆட்கொணர்வு மனு ஒன்றை எக்ஸ்னோரா அமைப்பின் நிர்மல் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார். 
இந்த  வழக்கு நீதிபதிகள் நாகமுத்து, பாரதி தாசன் முன்பு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டு நடந்து வருகிறது. 

இன்று நடந்த விசாரணையில் அரசு தரப்பின் விளக்கங்களை கேட்ட அமர்வு சிபிசிஐடி சிறப்பு அதிகாரிகள் விசாரணை தொடர்ந்து நடக்கட்டும் அதே வேலையில் குழந்தைகள் காணாமல் போவதை கண்டுபிடிப்பதில் சட்டம் ஒழுங்கு போலீசாருக்கு அதிக வேலை பழு காரணமாக சிரமம் உள்ளது.

 இதை களைய காவல்துறையில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு என்ற பிரிவை துவக்கலாம். குழந்தைகள் காணாமல் போய் நெடு நாட்களாக கண்டுபிடிக்கப்படாத புகார்களை இவர்கள் விசாரிக்கலாம், சாதாரணமாக உறவினர் நண்பர்கள் குழந்தைகளை கடத்தி செல்வதை போலீசாரே விசாரிக்கலாம் என்ற ஆலோசனையை தெரிவித்துள்ளது. 

 மேலும் குழந்தைக் காணாமல் போய் ஏழு ஆண்டுகள் ஆகியிருந்தால் அரசு அவர்களுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு  வழங்கவும், ஓராண்டு கடந்திருந்தால் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது. குழந்தைகள் பிறக்கும்போதே விரல் ரேகைகளை பதிவு செய்வது மற்றும் விஞ்ஞானபூர்வ பதிவு சம்பந்தமாக தடயவியல் துறை மற்றும் தனிப்பிரிவு அமைப்பது சம்பந்தமாக உள்துறை ஆலோசனை பெற்று அரசு தரப்பு பதிலை வரும் ஜூலை 27 அன்று தெரிவிக்க வேண்டும் என்று வழக்கை தள்ளி வைத்தது.

No comments:

Post a Comment