Monday 20 June 2016

இடுக்கண் களைவதாம் நட்பு - தோழிக்கு மருத்துவக்கல்லூரி சீட்டை விட்டு கொடுத்த மாணவி


மருத்துவம் என்றாலே சேவை, அன்பு கலந்தது தான் ,அதில் வலுவான நட்பும் இணைந்தால். அதன் செயலுக்கு ஈடு இணை இல்லை.  நட்புக்கு எல்லை இல்லை என்பதை நிருபிக்கும் விதமாக தனக்கு கிடைத்த மருத்துவகல்லூரி சீட்டை தோழிக்கு விட்டுகொடுத்துள்ளார்.  மருத்துவ கல்லூரி கலந்தாய்வில் நடந்த ருசிகர சம்பவம். வருமாறு.





 மருத்துவ கல்விக்கான கலந்தாய்வில் இன்று காலை சிறப்பு பிரிவினருக்கான நடந்த மருத்துவ கலந்தாய்வில்  முதல் மாணவியாய் திருச்சியை சேர்ந்த ராணுவ வீரரின் மகள் (ராணுவ வாரிசு பிரிவின் கீழ்)  வர்ஷினி(17) என்ற மாணவி கலந்து கொண்டார். இவரது மதிப்பெண்ணுக்கு பொதுப்பிரிவிலேயே இடம் கிடைக்கும் என்பதால் தனக்கு ராணுவ பிரிவில் கிடைத்த சீட்டை தனது தோழியான பொதுப்பிரிவு மாணவி சீர்காழியை சேர்ந்த  ஜனனிக்கு (17) விட்டுகொடுத்தார்.

  இதனால் ஜனனிக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது. வர்ஷினியின் மதிப்பெண்ணுக்கு பிற்படுத்தப்பட்டோர் கோட்டாவில் நாளை எளிதாக இடம் கிடைத்துவிடும். நாளை நடைபெறும் கலந்தாய்வில் ஜனனிக்கு இடம் கிடைக்காது என்பதால் தனது ஒதுக்கீட்டு சீட்டை தனது தோழிக்கு விட்டுக்கொடுத்தார் வர்ஷினி.



  இதன் மூலம் தோழிகள் இருவரும் மருத்துவ கல்லூரியில் இடம் பிடிக்கின்றனர். ஜனனியின் பெற்றோர் வர்ஷினிக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். 

No comments:

Post a Comment