Monday 13 June 2016

புத்தக கண்காட்சி நிறைவு -10 லட்சம் வாசகர்கள் பங்கேற்றனர் ரூ15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை


தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி)  இணைந்து நடத்தும் 39-வது சென்னை புத்தக கண்காட்சி சென்னை தீவு திடலில் ஜூன் 1ஆம் தேதி  துவங்கி நேற்று நிறைவு பெற்றது.  


வருடா வருடம் டிசம்பர் தொடங்கி ஜனவரியில் முடியும் புத்தகக்கண்காட்சி இந்த ஆண்டு பெய்த கனமழை வெள்ளத்தால் தள்ளிப்போடப்பட்டது. ஜூன் 1 முதல் 13-ம் தேதி வரை நடைபெற்றது. ஜூன் மாதம் பள்ளி திறக்கும் சமயம், குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் பிஸியாக இருப்பார்கள் புத்தக விற்பனை பாதிக்கும் என்று கருதப்பட்டது, ஆனால் அதிக அளவில் வாசகர்கள் பங்கேற்று சிறப்பித்துள்ளனர் . கடந்த ஆண்டு நந்தனம் ஒய்.எம்.சி.ஏவில் நடைப்பெற்றது. இந்த ஆண்டு  தீவுத் திடலில் நடைபெற்றது
கிட்டத்தட்ட 700 அரங்குகளி்ல் 10 லட்சம் தலைப்புகளில் கோடிக்கணக்கான  புத்தகங்கள் இடம் பெற்ற  இந்தக் கண்காட்சியில் சுமார் 6 ஆயிரம் புதிய புத்தகங்களும், சுமார் ஒரு லட்சம் நூல்களும் இடம் பெற்றன. பார்வைத் திறன் குறைபாடுடையவர்களுக்கான பிரெய்லி நூல்கள் அடங்கிய சிறப்பு அரங்கமும் அமைக்கப்பட்டிருந்தது.  தமிழ், ஆங்கிலம் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, சமஸ்கிருதம், கன்னட நூல் அரங்குகள் இடம்பெற்றுள்ளன.  தினமும் மாலையில் கலை, இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தினசரி குறும்படங்கள் திரையிடப்படும். மாடித் தோட்டம் குறித்த அரங்கு, உணவுத் திருவிழா, ஓவியம், இசை, சார்ந்த போட்டிகளும் நடைபெற்றது.
கடந்த 13 நாட்களாக நடைபெற்று வந்த புத்தக கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது.இந்த புத்தக கண்காட்சிக்கு கடந்த 13 நாட்களில் 10 லட்சம் வாசகர்கள் வந்துள்ளதாக புத்தககண்காட்சி அமைப்பாளர்கள் தெரிவித்தனர். இதில் ரூ 15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை ஆகியுள்ளது. இந்த புத்தக கண்காட்சியில் 23 பதிப்பாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment