Friday 10 June 2016

ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது- 10 சங்கங்களுக்கு பார்கவுன்சில் நோட்டீஸ்





 வழக்கறிஞர் சட்ட திருத்தத்தை எதிர்த்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்த 10 மாவட்ட  சங்கங்களுக்கு பார் கவுன்சில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

   
 வழக்கறிஞர் சட்ட திருத்தத்தை எதிர்த்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக நீலகிரி,தூத்துக்குடி, தஞ்சாவூர்,திருச்சி,மணப்பாறை, முசிறி, கோவை, கோவில்பட்டி, அறந்தாங்கி, துரையூர் உள்ளிட்ட 10 வழக்குரைஞர்  சங்கங்கள் அறிவித்திருந்தன.

இந்நிலையில் போராட்டம் நடத்தும் வழக்கறிஞர்கள் சங்க தலைவர்கள் பட்டியல் எடுத்து நடவடிக்கை எடுக்குமாறு அகில இந்திய பார்கவுன்சில் தமிழக பார்கவுன்சிலுக்கு நேற்று கடிதம் எழுதி இருந்தது. 

அதையொட்டி போராட்டம் நடத்தும் உங்கள் மீது  ஏன் பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு பார்கவுன்சில் சார்பில் ஷோ காஸ்  நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவும் பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment