Friday 10 June 2016

ஜூன் 15 ல் கருணாநிதி தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்



தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களின் கூட்டம் வரும் 15ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. 
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி தலைமையில் திமுக  எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்  வரும் 15ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளதாக திமுக கொறடா சக்கரபாணி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற  தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக 134 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. திமுக 89 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும், முஸ்லீம் லீக் 1 தொகுதியிலும் வென்றது. பிரதான எதிர்கட்சியாக திமுக சட்டசபையில் அமர்ந்துள்ளது.
 சட்டமன்ற எதிர்கட்சித்தலைவராக யார் இருப்பது என்பது குறித்து திமுக தலைவர் கருணாநிதி , ஸ்டாலின் இடையே நடந்த பிரச்சனையில் ஸ்டாலினுக்கு விட்டு கொடுக்கப்பட்டது. ஸ்டாலின் எதிர்கட்சித்தலைவராக ஆனார்.
 இந்நிலையில் 16 ஆம் தேதி சட்டமன்றம் கூட உள்ள நிலையில் சட்டமன்றத்தில் செயல்படுவது குறித்து ஆலோசனை வழங்கும் கூட்டம் வரும் 15 ஆம் தேதி நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு கருணாநிதி தலைமை தாங்குகிறார். 

No comments:

Post a Comment