Wednesday 8 June 2016

ஜூன் 14 ல் பிரதமருடன் சந்திப்பு - முக்கிய கோரிக்கை வைக்கிறார் முதல்வர் ஜெயலலிதா



முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்ற பின்னர் பிரதமர் மோடியை சந்திக்கலாம் என தகவல்கள் ஓடிய நிலையில் ஜூன் 14 அன்று முதல்வரை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கியுள்ளார். இதனால் ஜூன் 14 அன்று பிரதமரை சந்திப்பது உறுதியாகிவிட்டது. 
 தமிழகத்தில் 50 எம்பிக்களுடன் அகில இந்திய அளவில் வலுவான கட்சியாக அதிமுக உள்ளது. பல்வேறு விவகாரங்களில் அதிமுக பாஜக உறவு டெல்லியில் நல்ல முறையில் உள்ளது. தமிழகத்தில் தற்போது மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் 15 மீனவர்கள் இரண்டு படகுகளை இலங்கை கடற்படை பிடித்து சென்றுள்ளது.

  91 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு மூன்று கடிதங்களை பிரதமருக்கு முதல்வர் எழுதி உள்ளார். இந்த சந்திப்பின் போது இது குறித்து பேசுவார் என தெரிகிறது. இதே போல் தமிழகத்தில் நிறைவேற்ற உள்ள திட்டங்கள் அதனால் ஏற்படும் செலவீனம் இதை உத்தேசித்து நிதி சம்பந்தமாக ஆரம்பகட்ட கோரிக்கை வைப்பார் என தெரிகிறது.
   இதை தவிர அதிமுக சார்பில் முக்கியமான கோரிக்கை ஒன்றை முதல்வர் வைப்பார் என தெரிகிறது. சாதிக் பாட்சா கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி  பிரதமரை வலியுறுத்துவார் என கூறப்படுகிறது.
   சமீபத்தில் பிரபாகரன் என்பவர் சாதிக் பாட்சா மரணம் பற்றி கொடுத்த பேட்டியை ஒட்டி அதிமுக சார்பில் வழக்கறிஞர் குழு சிபிஐ டைரக்டரை சந்தித்து சாதிக் பாட்சா மரண விவகாரத்தை சிபிஐ விசாரணை நடத்த கோரி இருப்பது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment