Wednesday 8 June 2016

தலைமை செயலாளர் மாற்றம் - தனி அதிகாரியாக சாந்த ஷீலா நாயர் நியமனம்


தமிழக தலைமை செயலாளராக இருக்கும் ஞானதேசிகன் திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் ராம் மோகன ராவ் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முதல்வரின்

தனிசெயலாளர்களில் ஒருவராக இருந்தவர் தற்போது தலைமை செயலாளர் ஆக்கப்பட்டுள்ளார்.

ஞானதேசிகன் டிட்கோ சேர்மனாக மாற்றப்பட்டுள்ளார். ஞானதேசிகன் மின்வாரிய சேர்மனாக இருந்த போது அவருக்கும் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கும் நல்ல உறவு இருந்தது. அந்த நேரத்தில் அவர் தலைமை செயலாளராக்கப்பட்டார்.

அந்த நேரத்தில் நத்தம் விஸ்வநாதனுடன் இருந்த நெருக்கத்தில் ஞானதேசிகன் தலைமை செயலாளராக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று நத்தம் விஸ்வநாதனின் கட்சி பொறுப்புகள் பிடுங்கப்பட்ட நிலையில் ஞானதேசிகனும் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அலுவலர் சாந்த ஷீலா நாயர் முதல்வரின்முதல்வர் அலுவலக தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றம் விபரம்: 

ராம்மோகன ராவ்--தலைமை செயலாளர்

ஞானதேசிகன் -டிட்கோ சேர்மன்

சாந்த ஷீலா நாயர்-முதல்வர் அலுவலக தனி அதிகாரி

சிவ்தாஸ் மீனா-முதலமைச்சர் தனி செயலாளர்

கூட்டுறவுத்துறை செயலாளர்- பிரதீப் யாதவ்

வேளாண்மைத்துறை செயலாளா¢ - ககன்தீப் சிங் பேடி

ஹன்ஸ்ராஜ் வர்மா-ஊரக வளர்ச்சி துறை செயலாளர்

அதுல்ய மிஸ்ரா--சுற்றுச்சூழல், வனத்துறை செயலாளர்அலுவலக ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment