Friday 10 June 2016

கொலை கொள்ளை தடுப்பு நடவடிக்கை - கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் பேட்டி



சென்னை மாநகர காவல்துறை சேவையை மேம்படுத்துவது குறித்து காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் சந்திதார்.

சென்னையில் குற்றச்செயல்களை தடுக்கவும் குற்றச்செயலகளை கண்கானிக்கும் வகையில்  அனைத்து சாலைகள் மற்றும் தெருக்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, காவல் நிலையங்களின் வெளிப்புறம் சிசிடிவி அமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

பொதுமக்கள் புகார்தாரர்கள் சந்திக்க வசதியாக  ஒவ்வொரு காவல் நிலையத்திலும் மாலை 5 மணிமுதல் 6 மணிவரை, காவல் ஆய்வாளர் காவல் நிலையத்தில் இருப்பார் என்று கூறினார். ஏற்கனவே நடைபெற்ற திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களின் சிசிடிவி காட்சிகளை, எச்சரிக்கை விளம்பரங்களாக சித்தரித்து, திரையரங்குகளில் விளம்பரப்படங்களாக வெளியிட திட்டம் உள்ளதாக  கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் தெரிவித்தார். 

மேலும், குடியிருப்போர் நல ஆலோசனை என்று, பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு ஆலோசனை வழங்கும் திட்டம், ஒவ்வொரு ஞாயிறு மாலை நேரத்தில் செயல்படுத்தப்படும் என்று ஆணையர் டி.கே ராஜேந்திரன் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, கூடுதல் ஆணையர்கள் அபய்குமார் சிங், சேஷசாயி , மற்றும் ஷங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment