Thursday 16 June 2016

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் தரவரிசை பட்டியல் வெளியீடு - 200/200 3 பேர்



மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது . கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்ககத்தில்  சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காலை வெளியிட்டார்.


 தமிழகத்தில் அரசு மற்றும் தனியார்  மருத்துவ கல்லூரிகளில் 2723 இடங்களும் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் 130 இடங்களும், பல்மருத்துவ படிப்புகளுக்கு 1055 இடங்களும் உள்ளன. இதற்காக 27 ஆயிரத்து 450 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதில் மாணவர்களுக்கான தர வரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. முதல் மூன்று இடங்களை 200 க்கு 200 எடுத்த மூன்று மாணவர்கள் பிடித்துள்ளனர். மீதமுள்ள மூன்று இடங்களை 199.7 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர் பெற்றுள்ளனர். முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள் .1. ஆதித்யா மகேஷ் (கன்னியாகுமரி)2.விக்னேஷ் (ஈரோடு),3. ஞானவேல்(விஜயவாடா) ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
முதல்கட்ட கலந்தாய்வு வரும் 21 முதல் 25 வரை நடக்க உள்ளது. 

No comments:

Post a Comment