Thursday 9 June 2016

20/20 கிரிக்கெட் தமிழ்நாடு பிரிமியர் லீக் துவக்கம் --- இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் பேட்டி


 

தமிழகம் அளவிலான 20-20 போட்டியை தமிழக கிரிக்கெட் சங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஐ.பி.எல்., பாணியில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் என இந்த தொடருக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது என்று சீனிவாசன் தெரிவித்தார்.  மொத்தம் 8 அணிகள் விளையாடும் எனவும் , தென்சென்னை,  காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, மதுரை, திண்டுக்கல், காரைக்குடி மற்றும் தூத்துக்குடி ஆகிய 8 நகரங்களின் அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. இந்த போட்டி ஆகஸ்ட் கடைசி வாரத்தில் துவங்கும். 



 போட்டிகள் சென்னை மற்றும் திண்டுக்கல்லில் பெரும்பாலும் இரவு நேர போட்டியாக நடத்தப்படும் என்று சீனிவாசன் தெரிவித்தார்.
 வீரர்கள் பட்டியல் ஜூலையில் வெளியிடப்படும், தமிழகத்தின் வீரர்களின் திறமையை வெளிக்கொணர இந்த போட்டிகள்  உதவும் எனவும் பிற மாநில வீரர்களை போட்டியில் பங்கேற்க வைக்க பிசிசிஐ அனுமதி கோரப்படும் என்றார். முதலாண்டு ரூ 33 கோடி எதிர்பார்பார்ப்பதாக தெரிவித்தார். மொத்தம் 27 போட்டிகள் நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் அணிக்கு ரூ 1 கோடியும், இரண்டாம் இடத்திற்கு ரூ.60 லட்சமும், மூன்றாம் இடத்திற்கு ரூ 40 லட்சமும் பரிசுத்தொகை வழங்கப்படும். பங்கு பெறும் அணிகளுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும். இவ்வாறு சீனிவாசன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment