Thursday 9 June 2016

பேசிக்கிறாங்க...தாமதமாகும் ஐஜிக்கள் பதவி உயர்வு

ஆகாத அதிகாரிக்காக பதவி உயர்வு தள்ளி வைப்பா?- தாமதமாகும் ஐஜிக்கள் பதவி உயர்வு

சிவனாண்டி
அம்ரீஷ் புஜாரி






ரவி
மஞ்சுநாதா














தமிழக காவல்துறையில் கண்காணிப்பாளர்கள் டிஐஜிக்களாகவும், டிஐஜிக்கள்  ஐஜிக்களாகவும் , ஐஜிக்கள் கூடுதல் டிஜிபிக்களாகவும் , கூடுதல் டிஜிபிக்கள் டிஜிபிக்களாக பதவி உயர்வுக்கு காத்திருந்தனர். இதில் எஸ்பிக்கள் டிஐஜியாக பதவி உயர்வு வந்தது. டிஐஜிக்கள் ஐஜிக்களாக பதவி உயர்வு பெற்றனர். ஐஜிக்கள் 6 பேர்,  கூடுதல் டிஜிபிக்கள் நான்கு பேரின் பதவி உயர்வு ஜனவரி முதல் எதிர்பார்க்கப்பட்டது.

ஜெயந்த் முரளி


ஐஜிக்கள் ரவி, அம்ரிஷ்புஜாரி, ஜெயந்த் முரளி, கருணாசாகர், சிவனாண்டி, மஞ்சுநாதா ஆகியோருக்கு கூடுதல் டிஜிபி பதவி உயர்வும் , கூடுதல் டிஜிபிக்கள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ், ராதாகிருஷ்ணன் , மகேந்திரன் ஆகியோருக்கு டிஜிபி பதவி உயர்வையும் ஒரே நேரத்தில் ஒப்புதல் அளித்து மத்திய அரசு அனுப்பி வைத்தது. இதில் கூடுதல் டிஜிபிக்கள் நான்கு பேரும் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றனர். ஆனால் தேர்தல் அறிவிப்பு வந்த காரணத்தால் ஐஜிக்கள் பதவி உயர்வு தள்ளி போனது. 


கருணாசாகர்
  ஐஜிக்கள் பதவி உயர்வுக்கு  மத்திய அரசு ஒப்புதல் அளித்தும் தரப்படவில்லை. இதனால் பதவி உயர்வு வரும் என இதோ அதோ என ஆறு பேரும் காத்திருந்தனர். ஆனால் கடைசி வரை அறிவிக்கப்படவில்லை. தேர்தல் முடிந்து மீண்டும் அதிமுக ஆட்சியமைத்து விட்டது. ஆனாலும் இதுவரை ஐஜிக்களுக்கு பதவி உயர்வு வரவில்லை.

 சாமி வரம் கொடுத்தும் பூசாரி வரம் கொடுக்காத கதையாக மாநில அரசு இதுவரை பதவி உயர்வு தராததால் வருத்தத்தில் இருக்கின்றனர் 6 ஐபிஎஸ் அதிகாரிகள்.  இதில் ஐஜி அரசுக்கு ஆகாத ஐஜி ஒருவர் ஜூலை இறுதியில் ஓய்வு பெற உள்ளதால் அவர் ஓய்வு பெறும் வரை பதவி உயர்வு வராது அவரை ஐஜியாக அனுப்ப உத்தேசித்துள்ளதால் அதன் பிறகுதான் பதவி உயர்வு  வரும்  என்ற பேச்சு காவல்துறை வட்டாரத்தில் ஓடுகிறது உண்மையா? 


No comments:

Post a Comment