Friday 17 June 2016

குல்பர்க் சொசைட்டி எரிப்பு வழக்கில் 24 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது


குல்பர்க் குடியிருப்பு எரிக்கப்பட்ட வழக்கில் 24 பேருக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது.

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில்  கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு வன்முறை சம்பங்கள் நடந்தது.
இந்த வன்முறை சம்பவங்களில்உச்சகட்டமாக  அகமதாபாத் அருகே உள்ள குல்பர்க் வீட்டுவசதி சொசைட்டி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் மீது ஒரு கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியதுடன், அந்த கட்டிடத்துக்கும் தீ வைத்தது.
இந்த சம்பவத்தில் 69 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில்  காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரியும் ஒருவர். இந்த சம்பவம் தொடர்பாகவிஷ்வ இந்து பரிஷத் தலைவர் அதுல் வைத்யா உள்பட  66 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது அகமதாபாத்தில் உள்ள சிறப்பு செசன்சு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இதில் 6 பேர் விசாரணை காலத்திலேயே இறந்துவிட்டனர். 



இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த 2-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது  24 பேரை குற்றவாளிகள் எனவும், பா.ஜனதா நகரசபை உறுப்பினர் பிபின் படல் உள்பட 36 பேரை விடுவித்தும் தீர்ப்பளிக்கப்பட்டது.இந்த வழக்கில் குற்றவாளிகள் 24 பேருக்குமான தண்டனை குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என கூறி தண்டனை தள்ளிவைக்கப்பட்டு வந்த நிலையில் இன்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
   
குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட 24 பேரில் 11 பேருக்கு இறக்கும்வரை ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டையும், மேலும் 12 பேருக்கு தலா ஏழாண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி பி.பி.தேசாய் தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment