Tuesday 14 June 2016

சேவை வரி மசோதா, மருத்துவ நுழைவுத்தேர்வு ,ஜல்லிக்கட்டு உள்ளிட்ட 29 அம்ச கோரிக்கை - பிரதமரிடம் அளித்தார் ஜெயலலிதா



டெல்லி சென்ற முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது பிரதமரிடம் 96 பக்கம் கொண்ட கோரிக்கை மனுவை அளித்தார். அதில் 29 அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் வெளியாகி உள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் குறித்தும், காவிரியில் கர்நாடக அரசு மேகதாது தடுப்பணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசின் ஆட்சேபத்தையும், ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடை நீக்கம், முல்லைப்பெரியாறு அணை நீரின் அளவை 152 அடியாக உயர்த்துவது, மாநிலங்களுக்கிடையேயான நதிகளை இணைப்பது, அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றுவது, கச்சத்தீவு மீட்பு, கச்சத்தீவில் தேவாலயம் கட்டுவது தொடர்பான ஆட்சேபனை, மெட்ரோ ரயில் இரண்டாவது ப்ராஜக்டுக்கு அனுமதி, ஊரகம், ஜவுளித்துறை, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், சிறு குறு தொழில்களில் மத்திய அரசின் ஒத்துழைப்பு,

 மத்திய அரசு அளிக்க  வேண்டிய நிதியை உடனே வழங்க வேண்டும், தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும், 21 மீனவர்களையும், 92 படகுகளையும் உடனே மீட்க வேண்டும், மருத்துவ நுழைவுத்தேர்வை அமல்படுத்த கூடாது. தமிழகத்திற்கு பூரண விலக்கு வேண்டும்.எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகம் சொல்லும் இடத்தில் அமைக்க வேண்டும்,  சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவில் தமிழகத்தின் நிலைபாடு தொடரும், நிதி மசோதாவில் தமிழக அரசின் திருத்தங்களை கவனத்தில் கொள்ள வேண்டும், கெயில் திட்டத்தை மாற்று பாதையில் இயக்க வேண்டும், கூடங்குளம் இரண்டாவது அலகை துவக்க வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளார்.

50 நிமிடங்கள் நீடித்த சந்திப்புக்கு பின்னர் தமிழக இல்லத்துக்கு முதல்வர் திரும்பினார். அங்கு அவரை அதிமுகவின் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர். மத்திய அமைச்சர் பொன்ராதா கிருஷ்ணன் , நிர்மலா சீத்தாராமன், ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட  சில மத்திய அமைச்சர்களை சந்திக்கிறார். 

No comments:

Post a Comment