Tuesday 14 June 2016

சர்ச்சையை கிளப்பிய கலெக்டர் விசிட் - முதல்வரின் தொகுதி மட்டும் என்ன ஸ்பெஷலா ? சென்னைவாசிகள் கொந்தளிப்பு


ஆட்சியர் கோவிந்தராஜ்

தன்னை தேர்வு செய்த ஆர்.கே.நகர் தொகுதியை முதன்மை தொகுதியாக மாற்றுவேன் என்று கூறிய முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் குறை கேட்க அலௌவலகம் துவக்கி உள்ளார். வாரத்தில் ஒருநாள் முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரி  ஒருவர் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று நாள் முழுவதும் அங்கேயே இருந்து பொதுமக்களிடம் மனுக்களை பெறுவார் என அறிவிக்கப்பட்டது.
அவ்வாறு பெறப்படும்  மனுக்கள் அனைத்தும் தனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை உடனடியாக செயல்படுத்தும் விதமாக தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் தொகுதி மக்களின் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் இன்று காலையில் தொடங்கியது. முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு சிறப்பு அலுவலர் கணேஷ்கண்ணா பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அவருடன் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜும் அமர்ந்திருந்தார். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆலோசனை வழங்கினார். காலையிலிருந்தே நூற்றுகணக்கானோர் தங்களது குறைகளை  மனுவாக அளித்தனர்.
 முதல்வர் தொகுதியில் அவரது உத்தரவுப்படி தனி அலுவலர் அமர்ந்து மனு வாங்கி அது தொகுதி எம்.எல்.ஏ என்ற முறையில் அந்த புகார்களுக்கு முதல்வர் நடவடிக்கை எடுக்க போகிறார். ஆனால் மாவட்ட ஆட்சியர் உடன் சென்று மனு வாங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் இதே போல் சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதி மக்களின் குறைகளை நேரில் சென்று அமர்ந்து வாங்குவாரா? மற்ற தொகுதி மக்கள் எல்லாம் வாக்காளர்கள் இல்லையா அவர்களுக்கு பிரச்சனையே இல்லையா. சாதாரண வட்டாட்சியருக்கும் கீழ் உள்ள அதிகாரிகள் கூட எங்கள் குறைகளை கேட்க முன்வராத போது மாவட்ட ஆட்சியரே ஒரு தொகுதியில் குறை கேட்க உட்பாக்ருவது ஆச்சர்யத்தை தருகிறது, மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் எல்லா தொகுதிகளுக்கும் இதே போல் நேரம் ஒதுக்கி மனு பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment