Sunday 19 June 2016

கருணாநிதியின் 3 நாள் மவுனம் - திமுகவில் நடப்பது என்ன

 

  திமுக தலைவர் கலைஞரின் அறிக்கை வராத நாளே இருக்காது அதேபோல் டுவிட்டரில் எதாவது கருத்தை பதிவு செய்துவிடுவார். அதிலும் ஆளுங்கட்சி சம்பந்தப்பட்ட விவகாரம் என்றால் அறிக்கையில் நல்ல காரம் இருக்கும்.       அப்படிப்பட்ட நிலையில கடந்த மூன்று நாட்களாக மவுனமாக இருந்து வருகிறார் கருணாநிதி . 

கடைசியாக கவர்னர் உரைப்பற்றி கருத்துச்சொன்னார். அதன்பின்னர் இருக்கை பிரச்சனை பெரிதாகி சபாநாயகர் அறையில் ஸ்டாலின் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் சென்று கேட்க வாக்குவாதம் முற்றி சபாநாயகர் மற்றும் சட்டசபை செயலர் ஜலாலுத்தீன் இருவரிடமும் வாக்குவாதம் செய்து தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்ததாக புகார் எழுந்தது.  

 அதன்பின்னர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்க அதற்கு பதிலடியாக ஓபிஎஸ் அறிக்கை விட அதில் ஓபிஎஸ் தந்தைக்கும் தனயனுக்கும் உள்ள பிரச்சனை என்கிற ரீதியில் அறிக்கைவிட அன்று முழுதும் பத்திரிக்கைகளில் அதுதான் தலைப்பு செய்தி.  ஆனால் ஓபிஎஸ்க்கு மறுப்பாக ஸ்டாலின் அறிக்கை விட்டு குடும்பத்தில் கட்சியில்  சிண்டு முடிய வேண்டாம் என்று ஓபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்தார் .

குடும்பம் அரசியல் பற்றி குறிப்பிட்டு யாராவது பிரச்சனை கிளப்பினால் உடனடியாக பதிலடி கொடுக்கும் கருணாநிதி 3 நாட்களாக மவுனமாக இருந்து வருகிறார். குறைந்த பட்சம் டுவிட்டரில் கூட ரெண்டு வரி பதிலளிக்கவில்லை.   உண்மையில் இது போன்ற விவகாரங்களில் மவுனம் காக்கும் ரகம் அல்ல அவர். 

அதிலும் எதிர்கட்சித்தலைவர் பதவியை பிடுங்கி கொண்டீர்கள் , திமுக என்றால் கருணாநிதி தான் என்கிற ரீதியில் வந்த ஓபிஎஸ் அறிக்கைக்கு சரியாக பதிலளிக்க கருணாநிதியால் முடியும் ஆனாலும் அவர் மவுனமாக இருந்துவிட்டது திமுக தொண்டர்கள், அரசியல் நோக்கர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பி உள்ளது.  


எதிர்கட்சித்தலைவர் பதவி தன்னிடமிருந்து பறிக்கப்பட்டதாக கருதுகிறாரா?, சபாநாயகர் அறையில் நடந்த சச்சரவை விரும்பவில்லையா என்ற பல கேள்விகள் எழுகிறது. அறிவாலய வட்டாரங்கள் இதை உண்மை என்று ஒத்துகொண்டாலும் அழகிரியை கட்சிக்குள் கொண்டுவருவதில் தலைவர் தீவிரமாக இருக்கிறார் ஆனால் தளபதி அதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவிப்பதால் மன வருத்தத்தில் இருக்கிறார் ,

 சட்டசபை இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் அலுவலகம் கேட்டபின்னரே கொறடா மூலம் கடிதம் கொடுத்ததும் அவருக்கு சற்று வருத்தம் தான் என்கிறார்கள். தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டபோது கருணாநிதி இப்படி எழுதினார். 


 இருக்கிற பிரச்சனையில் ஓபிஎஸ் என்னை பார்த்தால் கட்டிபிடித்து அழுது எல்லா பிரச்சனைகளைதும் கொட்டிவிடுவார் என்று , இப்ப அவருக்கு இருக்கும் பிரச்சனையில் ஓபிஎஸ்சை சந்தித்தால் கட்டிபிடித்து இவர் ஓபிஎஸ்சிடம் எல்லா பிரச்சனைகளையும் கொட்டி தீத்துடுவார் போல என்று அதிமுக தொண்டர் ஒருவர் சொன்னார். மறுக்கமுடியாமல் நாம் நடையை கட்டினோம்.

No comments:

Post a Comment