Monday 6 June 2016

50 இரும்பு தடுப்புகள் , 500 மீ நைலான் கயிறு பொறுப்பு - அதிகாரிகள் தொல்லையால் கதறும் ஆய்வாளர்கள்


முதல்வர் பாதுகாப்புக்கு வரும் இன்ஸ்பெக்டர்கள் 50 பாரிகாட் மற்றும் 500 மீட்டர் கயிற்றுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று மேலதிகாரிகள் உத்தரவால்  இன்ஸ்பெக்டர்கள் கதறுகிறார்கள்.

சென்னையில் முதல்வர் பாதுகப்பு என்பது ஒரு பெரிய ப்ராஜக்ட் போன்றது. அதை போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பாக்கம் இருந்து பார்த்தால் தெரியும். முதல்வரை காண வரும் தொண்டர்களை தடுக்கவும் பாதுகாப்பு கொடுக்கவும் போலீசார் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. சமீபத்தில் முதல்வர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஒரு உதவி ஆய்வாளர் கால் ஒடிந்து போனது. இப்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒருபுறம் இருக்க வாகனங்களை திருப்பி விட , போக்குவரத்தை சரி செய்ய , பொதுமக்களை கட்டுபடுத்த இரும்பிலாலான தடுப்புகளை போலீசார் பயன்படுத்துகின்றனர்.

இந்த தடுப்புகளை விளம்பரதாரர்கள், வணிக நிறுவனங்கள் இலவசமாக அளித்தாலும் அதை பயன்படுத்தவும் எடுத்து வந்து எடுத்து செல்லவும் லோக்கல் போலீசார் தான் அதை பராமரிக்கின்றனர். 


இதை பராமரிப்பதும் எடுத்து செல்வதையும் கேட்டால் ஸ்டேஷனில் கதைகதையாய் சொல்வார்கள். முதல்வர் வெளியே வரும்போது பாதுகாப்புக்காக அனைத்து ஸ்டேஷன்களிலிருந்தும் தடுப்புகள் கொண்டுவந்து கொண்டு செல்வார்கள். இந்த முறை முதல்வர் ஆர்.கே.நகருக்கு நன்றி சொல்ல வருவதை ஒட்டி ஒவ்வொரு ஆய்வாளரும் 50 பாரிகாட்கள் , 500 மீ நைலான் கயிற்றுக்கு பொறுப்பேற்க வேண்டும் கொண்டு வந்து கொண்டு செல்வது அவர்கள் பொறுப்பு என்று மேலதிகாரிகள் உத்தர்வால் இன்ஸ்பெக்டர்கள் கொதித்து போயிருக்கின்றனர். சார் 50 பாரிகாட் , 500 மீட்டர் நைலான் கயிறு கொண்டு வருவதே கஷ்டம் அதற்கு வண்டிக்கூலி கூட தரமாட்டேன் என்றால் எப்படி சார் ஒவ்வொரு முறையும் ரூ 4000/- வரை வண்டி வாடகையே ஆகிறது இந்த பணத்திற்கு எங்க சார் போறது என்று புலம்பி தீர்த்து விட்டார்கள். இந்த பணத்தை அரசாங்கம் தராவிட்டால் ஆய்வாளர்கள் ஒன்று கைக்காசை செலவழிக்க வேண்டும் அல்லது யார் தலையிலாவது கட்ட வேண்டும். அப்புறம் எங்கே அங்கு நேர்மை இருக்கும்.

No comments:

Post a Comment