Wednesday 8 June 2016

ஜெயலலிதாவின் பள்ளி ஆசிரியை காலமானார்




முதல்வர் ஜெயலலிதாவின் பள்ளி ஆசிரையை இன்று காலமானார். அவருக்கு முதல்வர் சார்பில் மலர் வளையம் வைக்கப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதா 10 ஆம் வகுப்பு வரை படித்தார். பின்னர் பியூசி படிக்க ஸ்டெல்லா மேரி கல்லூரியில் சேர்ந்த அவர் ஒரே நாள் கல்லூரிக்கு சென்றார். பின்னர் சினிமா துறைக்கு சென்றவர் அதில் பிரபலமானார். 
 தனது பள்ளி வாழ்க்கையை மிகவும் நேசித்த ஜெயலலிதா படித்த பள்ளியின் சிறந்த ஆசிரியையாக இருந்தவர் கேத்ரின்சைமன். இவர் ஜெயலலிதா பள்ளியை விட்டு விலகிய பின்னரும் சினிமா , அரசியல் என பல துறைகளில் இருந்த போதும் அவருடன் தொடர்பு வைத்திருந்தவர். இந்நிலையில் வயோதிகம் காரணமாக காத்ரின் சைமன் இன்று மரணமடைந்தார்.
 அவரது உடலுக்கு முதல்வர் சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தனது வாழ்க்கையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏறப்டுத்திய ஆசிரியர் கேத்ரின் சைமன் என ஜெயலலிதா தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment