Thursday 9 June 2016

கோகுல இந்திரா கட்சியிலிருந்து நீக்கப்பட்டாரா?




1990 களில் சிவகங்கை மாவட்டத்திலிருந்து கண்ணப்பனால் கண்டெடுக்கப்பட்டு அரசியலுக்கு கொண்டு வரப்பட்ட  இளம் வக்கீல் கோகுல இந்திரா பின்னர் சசிகலா குரூப்புக்கு நெருக்கமானார். 2001 ல் ராஜ்ய சபா எம்பி , மாநில மகளிரணி செயலாளர் ஆக்கப்பட்ட இவரது வளர்ச்சி அபரிதமாக இருந்தது. அழுகாச்சி வேஷம் போட்டே அதிக அளவில் பதவி பெற்றவர் இவர் என்று கட்சிக்குள் பேச்சு உண்டு.

பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு அண்ணா நகரில் போட்டியிட்ட கோகுல இந்திராவுக்கு சசிகலா ஆதரவால் கிடைத்தது வணிகவரித்துறை என்ற பவரான துறைக்கு அமைச்சராகி அதில் புகார்கள் வர பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சராக்கப்பட்டார். அதன் பின்னர் சசிகலா கும்பலை வெளியேற்றியபோது அவரையும் அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா. தான் எப்போதும் அம்மாவின் விசுவாசி என கூறியதால் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டு கைத்தறி துறை அமைச்சரானார். அங்கு சகாயம் ஐஏஎஸ்சுடன் மோதலில் ஈடுபட்டார் கோகுல இந்திரா. அமைச்சர் அந்தஸ்த்துடன் மாநில மகளிரணி பதவி மனுக்கள் விசாரணை குழு என பவராக இருந்தார். ஜெயலலிதா சிறையில் இருந்த போது அவரது பிறந்த நாளுக்கு கேக் வெட்ட சாதாரண நூல் புடவையுடன் வந்து அழுது புரண்டு உடன் இருந்த வளர்மதியையே அலற வைத்தார். மறுநாள் அரசு விழாவில் படோபட பட்டுப்புடவையில் வந்து தொண்டர்களை அசர வைத்தவர் கோகுல இந்திரா. சென்னையில் அதிகாரம் செலுத்துமளவுக்கு பவராக இருந்தார். 


ஆனால் தொகுதியை தக்க வைப்பதில் கோட்டை விட்டார். தொகுதி மக்களை மறந்தது, வெள்ள நேரத்தில் அலட்சியமாக இருந்த காரணத்தால் தொகுதிமக்களின் கோபத்துக்கு ஆளான கோகுல இந்திராவுக்கு மீண்டும் சட்டமன்றத்துக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. தேர்தலில் பல பிரச்சனைகள் செய்தாலும் சாதாரணமாக  ஒரு புது முகத்திடம் தோல்வியை தழுவினார். அதிலிருந்து அவருக்கு இறங்குமுகம் ஆரம்பமானது.  நேற்று மாநில மகளிரணி செயலாளர் பதவி பிடுங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக ஃபேஸ்புக், வாட்ஸ் அப்புகளில் வேகமாக தகவல் பரவி வருகிறது.  ஆனால் கட்சி வட்டாரத்தில் விசாரித்ததில் அப்படி எதுவும் இல்லை என தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment