Saturday 11 June 2016

தும்பை விட்டு வாலை பிடிக்கும் ரங்கசாமி - திறக்காத கார்டன் கதவு














அரசியல் வரலாற்றில் சிலர் செய்யும் செயல்களின் பின் விளைவுகள்  பின்னர் அவர்களுக்கே திரும்ப வேலைகாட்டும் என்பதற்கு ஏகப்பட்ட உதாரணங்களை கூறலாம்  உலகம் உருண்டை என்ற தத்துவம் அரசியலுக்கும் பொருந்தும். அதில்  சமீபத்திய உதாரணம் பாண்டிச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஆவார். 

2011 ஆம் ஆண்டு தமிழகத்தில் சிறப்பான கூட்டணி அமைத்தது போலவே பாண்டிச்சேரியிலும் ரங்கசாமியின் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தார். அந்த கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், சிபிஎம், தேமுதிக, சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இருந்தன. மறுபுறம் காங்கிரஸ், திமுக, விசிகே, பாமக, கூட்டணி அமைத்து போட்டியிட்டன.  

2011 சட்டமன்ற தேர்தலில் 17 தொகுதியில் போட்டியிட்ட என்ஆர் காங்கிரஸ் 15 தொகுதிகளை கைப்பற்றியது. 10 தொகுதியில் போட்டியிட்ட  அதிமுக 5 இடங்களில் வென்றது.  அக்கட்சியில் இடம்பெற்றிருந்த இந்திய கம்யூ, தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூ. ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை.  

காங்கிரஸ் கட்சி 17 தொகுதியில் போட்டியிட்டு 7 இடங்களை மட்டுமே பெற்றது. 10 இடங்களில் நின்ற திமுகவுக்கு 2 இடமே கிடைத்தன. பாமக 2 தொகுதியிலும், வி.சிறுத்தை ஒரு தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தன. இதனால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. 15 தொகுதியில் வென்ற என்ஆர் காங்கிரஸ், அதிமுகவை உதறி விட்டு சுயேட்சை ஆதரவுடன் ஆட்சியமைத்தது.

 மரியாதைக்கு கூட ரங்கசாமி ஜெயலலிதாவை சந்திக்கவில்லை. நன்றி கூட தெரிவிக்கவில்லை.அவரது அலட்சியம் ஜெயலலிதாவை கடுமையாக கோபம் அடைய வைத்தது. கண்டித்து அறிக்கையும் வெளியிட்டார். அதன் பிறகு அண்ணாமலை பட ரஜினி போல் சரியான நேரத்திற்காக ஜெயலலிதா காத்துகொண்டு இருந்தார். 
அந்த காலமும் வந்தது , ஐந்தாண்டுகள் அசைக்க முடியாத அளவுக்கு ஆட்சியில் இருந்த ரங்கசாமியின் ஆட்சி  சட்டமன்ற தேர்தலில் முடிவுக்கு  வந்தது.

 திமுக காங்கிரஸ் கூட்டணி சேராது தாம் எளிதாக ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைத்தவர் கனவில் மண் விழுந்தது. காங்கிரஸ் திமுக கூட்டணி புதுச்சேரியில் அமைந்தது. ரங்கசாமியின் பாடு திண்டாட்டமானது. வழக்கம் போல் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் எப்படியும் அதிமுக வந்துதான் ஆக வேண்டும் என்று கணக்கு போட்டு ஜெயலலிதாவுக்கு தூது விட்டார். ஆனால் ஜெயலலிதா அந்த துரோகத்தை மறக்காததால் கூட்டணிக்கு ஒத்துகொள்ளவில்லை. 

இதன் விளைவு தனித்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ரங்கசாமியின் கட்சி தோல்வியை தழுவியது. தனித்து நின்ற அதிமுக 4 இடங்களை பெற்றது. காங்கிரஸ் திமுக கூட்டணி எளிதாக ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் அதிமுக கூட்டணி அமைந்திருந்தால் மீண்டும் ரங்கசாமி ஆட்சியை பிடித்திருக்கலாம்.ஆனால் தனது நடவடிக்கையால் அதை இழந்தார்.
 
 உலகம் உருண்டை என்பதை புரிந்து கொண்ட ரங்கசாமி இப்போது எப்படியாவது ஜெயலலிதாவை சந்தித்து கூட்டணியை அமைத்து விட வேண்டும் என்று துடிக்கிறார் ஆனால் கார்டன் கதவுகள் இதுவரை திறக்கவே இல்லை. முற்பகல் செய்யின்   பிற்பகல் தானே விளையும்.

No comments:

Post a Comment