Friday 10 June 2016

மக்கள் நலக்கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவு - தள்ளிவைத்தார் வாசன் நிர்வாகிகள் ஏமாற்றம்



சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி தேமுதிகவுடன் இணைந்து களம் கணடார் ஜி.கே.வாசன். இதில் படுதோல்வி அடைந்தார். சட்டமன்ற  தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி கட்சிகள் ஒரு தொகுதியை கூட கைப்பற்ற வில்லை. தனித்து நின்ற பாமக , பாஜக கவுரவமான வாக்கு சதவிகிதங்களை பெற வாசன் கடுமையான சரிவை சந்தித்தார். 

இதன் விளைவு தமிழ் மாநில காங்கிரசிற்குள் கடுமையான கருத்து விமர்சனங்கள் உருவாக அனைத்து தரப்பு கருத்தையும் கேட்க ஆரம்பித்த வாசன் . கடந்த 23,24,25 அன்று 26 தொகுதி வேட்பாளர்களை அழைத்து முழுமையாக எல்லா தகவல்களையும் திரட்டினார். 4 ஆம் தேதி மாநில நிர்வாகிகள் கூட்டம், ஜூன் 5 மாவட்ட  தலைவர்களை கூட்டம், ஜூன். 6 ஆம் தேதி மாநில செயலாளர், இணை செயலாளர் கூட்டம் நடத்தினார். இந்த கூட்டங்களில் திரட்டிய தகவல் அடிப்படையில் இன்று  மாநில செயற்குழு உறுப்பினர் கூட்டத்தில் முடிவை அறிவிக்க இருந்தார் வாசன்.

 ஏற்கனவே வேட்பாளர்கள் , மாவட்ட நிர்வாகிகள் மக்கள் நலக்கூட்டணியை விட்டு வெளியேறினால்தான் கட்சியை வளர்க்க முடியும் என்று வலியுறுத்தியிருந்தனர்.இந்நிலையில் வாசன் வெளியேறலாம் என்ற முடிவு மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் கவனத்துக்கும் வந்தது. உள்ளாட்சி தேர்தல் வரை கூட்டணியை தொடருங்கள் நல்ல வாய்ப்பு இருக்கிறது. வெளியேறினாலும் தனித்து தான் நிற்க நேரிடும் அதைவிட இருக்கும் கூட்டணியிலேயே கவுரவமாக தொடர்ந்தால் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று எடுத்து கூறியதாக தெரிகிறது.
     இதையடுத்து உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை கூட்டணியை தொடரலாம் என்று வாசன் முடிவெடுத்துள்ளார்.
 இன்று வெளியேறும் அறிவிப்பை வாசன் வெளியிடுவார் என்று எதிர்பார்த்த கட்சி நிர்வாகிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதத்தில் சில தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றிவிட்டு தனது முடிவை ஒருவாரம் தள்ளி வைப்பதாக வாசன் அறிவிக்கிறார். ஆகவே மக்கள் நலக்கூட்டணியிலிருந்து உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை வாசன் வெளியேற மாட்டார் என தெரிகிறது.

No comments:

Post a Comment