Wednesday 15 June 2016

தமிழக சட்டமன்ற கூட்டம் இன்று தொடக்கம் - முதல் நாள் கவர்னர் உரை

  

15 வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. காலை 11 மணிக்கு துவங்கும் சட்டமன்ற கூட்டத்தின் முதல் நாளான இன்று கவர்னர் உரை நிகழ்த்துகிறார். அதில் தமிழக அரசின் திட்டங்கள் அதை செயல்படுத்தும் விதம் மற்றும் புதிய அறிவிப்புகள் இருக்கும்.

பலமான எதிர்கட்சி
இந்த தேர்தலில் வென்று ஆட்சியை பிடிப்போம் என  திமுகவினர் நம்பிய நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணி 98 இடங்களை பிடித்தது. இதில் திமுக மட்டும் 89 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் 8 இடங்களையும், முஸ்லீம் லீக் 1 தொகுதியையும் வென்றது.இதனால் சட்டமன்றத்தில் பலம் வாய்ந்த எதிர்கட்சியாக திமுகவும் அதன் தலைவராக ஸ்டாலினும் அமர்ந்துள்ளனர்.

வாக்குறுதிகள் அறிவிப்பு
133 இடங்களுடன் பதவியேற்றுள்ள ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றவுடன் தேர்தல் வாக்குறுதியில் தாம் அறிவித்த தாலிக்கு 8 கிராம் தங்கம், 100 யூனிட் மின்சாரம் இலவசம், 500 மதுக்கடைகள் மூடல் படிப்படியாக மதுவிலக்கு அமல், விவசாய கடன்கள் தள்ளுபடி, விசைத்தறிகளுக்கு 750 யூனிட் மின்சாரம் உள்ளிட்ட   5 திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.இவைகளை எப்படி நிறைவேற்ற போகிறார் என்ற அறிவிப்பும் மற்ற புதிய அறிவிப்புகளும் கவர்னர் உரையில் இருக்கும் என கூறப்படுகிறது. மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகள் பட்டயல் இந்த அறிவிப்பில் வெளியாகும் என கூறுகின்றனர்.

எதிர் நோக்கும் பிரச்சனைகள்
இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து மீனவர்கள் சிறைபிடிப்பு, கட்சத்தீவு பிரச்சனை, சட்டம் ஒழுங்கு, ஏழு பேர் விடுதலை பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எதிர்கட்சிகள் எழுப்பலாம்

அலுவல் ஆய்வுக்குழு
இன்று கவர்னர் உரை முடிந்தவுடன் உடனடியாக சபாநாயகர் ஜெயபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாள் சட்டசபையை நடத்துவது என முடிவெடுப்பார்கள். 

No comments:

Post a Comment