Wednesday 15 June 2016

ஓசூரில் நகைபறிப்பு திருடர்களை விரட்டி பிடித்த ஏட்டு குத்தி கொலை -- பிடிபட்ட திருடன் மாரடைப்பால் இறந்தான்


 ஓசூரில் நகைபறிப்பு திருடர்களை போலீசார் பிடிக்க சென்றபோது கத்தியால் குத்தப்பட்ட ஏட்டு மரணமடைந்தார். இதையடுத்து பிடிபட்ட ஒரு குற்றவாளியும் மாரடைப்பால் இறந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஓசூரில் நேற்று நகைபறிப்பு கொள்ளையர்களை பிடிக்க போலீசார்  சென்ற போது கொள்ளையர்கள் அவர்களை கத்தியால் சரமாரியாக குத்தினார்கள். இதில் குற்றப்பிரிவு எஸ்.ஐ. நாகராஜ்,   ஏட்டுகள் முனுசாமி, தனபால் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் 3 பேருக்கும் ஓசூர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் தலைமை காவலர்   முனுசாமி நள்ளிரவு ஒரு மணிக்கு உயிரிழந்தார்,  அவரது உடல் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கை கொலை வழக்காக ஓசூர் டவுன் போலீசார் மாற்றி உள்ளனர்.  இந்த கொலையில் தொடர்புடைய ஒரு நகைபறிப்பு குற்றவாளி பிடிபட்டுள்ளான். அவன் பெயர் புஜ்ஜு, பெங்களூரூ கே.ஆர்.புரத்தை சேர்ந்தவன் என்பது விசாரணையில் தெரிய வந்தது. 

அவன் கொடுத்த தகவலின் பேரில் மீதமுள்ள 3 குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூரு சென்றுள்ளனர். இதனிடையே போலீசாரை கத்தியால் குத்தி பிடிபட்ட குற்றவாளிகளில் ஒருவனான புஜ்ஜு விசாரணையின் போது மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதித்தனர், ஆனால் அவன்  இறந்து போனதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment