Sunday 5 June 2016

புதிய சட்டதிருத்தம் சென்னையில் வழக்கறிஞர்கள் பேரணி

கோப்பு படம்


வழக்கறிஞர்களை பாதிக்கும் புதிய சட்ட திருத்தத்திற்கு ஆட்சேபம் தெரிவித்து வழக்கறிஞர்கள் இன்று சென்னையில் பேரணி நடத்துகின்றனர். நீதிமன்றங்களில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வழக்கறிஞர் கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் வழக்கறிஞர் சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிக்கை மே 25 முதல் அமலுக்கு வந்தது.
2009-ல் விபத்து வழக்கு ஒன்றில்  தீர்ப்பு கூறிய உச்ச நீதிமன்றம், வழக்க றிஞர் சட்டம் 34-வது பிரிவின்படி நீதிமன்றங்களுக்குள் தவறு இழைக்கும் வழக்கறிஞர்களை தண்டிக்க விதிகளை வகுக்குமாறு அனைத்து உயர் நீதிமன்றங்க ளுக்கும் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட விதிகள், அரசிதழில் வெளியிடப் படாமல் இருந்தன.

இந்நிலையில், வழக்கறிஞர் சட்டப்பிரிவில் திருத்தம் செய்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் டி.ரவீந்திரன் அறிவிக்கை வெளியிட்டார் . இந்த சட்டதிருத்தம் வழக்கறிஞர்கள் குரல்வளையை நெறிப்பதாகவும் சட்டதிருத்தம் குறித்து தங்களது சங்கங்களின் கருத்துக்களை கேட்கவில்லை என தங்களது ஆட்சேபத்தை தெரிவிக்கும் விதத்தில் வழக்கறிஞர்கள் இன்று மாநில அளவிலான பேரணியை சென்னையில் நடத்துகின்றனர் . 
சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து காலை 10 மணிக்கு பேரணி துவங்குகிறது சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே முடிகிறது . முடிவில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த பேரணியில் மாநிலம் முழுதுமிருந்து வழக்கறிஞர்கள் பங்கேற்கின்றனர்.

No comments:

Post a Comment