Wednesday 15 June 2016

குரோம்பேட்டை பெண் கொலையில் பொறியியல் பட்டதாரி கைது - கொடுத்த பணத்தை கேட்டு கேவலமாக பேசியதால் ஆத்திரத்தில் கொலை



குரோம் பேட்டை பெண் கொலையில் பொறியியல் பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று குரோம்பேட்டை, பாரதிபுரம், நெல்லையப்பன் தெரு முகவரியில் வசித்து வந்த கிருஷ்ணவேணி (37) அடையாளம்தெரியாத நபர்களால் அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன் விசாரணை துரிதபப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களின் அடிப்படையில்மேற்கொண்ட முதற்கட்ட விசாணையில், கொலையுண்ட கிருஷ்ணவேணியின்வீட்டிலிருந்து  நகைகளோ, பொருட்களோ திருடப்படவில்லை எனத் தெரியவந்தது.

மேலும்,  விசாரணையில் கொலையான கிருஷ்ணவேணியின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு விசாரணை செய்ததில் பெண்மணியின் உறவினர் அருண்குமார்(24) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. எழும்பூரை சேர்ந்த அருண்குமாரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின்போது, இறந்துபோன கிருஷ்ணவேணியின் கணவர் ஜெயமுருகன் என்பவரிடம் அருண்குமாரின் தந்தை தர்மலிங்கம்  ரூ.50,000/-கடன் பெற்றதாகவும், அதனை திருப்பி தராததால் கிருஷ்ணவேணி அருண்குமாரின் தந்தையை அவதூறாக பேசியாதாகவும் இது பற்றி கேள்விபட்ட தான் நேற்று காலை 10.30 மணி அளவில் அவரது வீட்டுக்கு சென்று கேட்டதாக தெரிவித்துள்ளார். 

வாக்குவாதம் அதிகமாகவே ஆத்திரத்தில் கிருஷ்ணவேணியை தாக்கி வீட்டிலிருந்த தலையணையால் கிருஷ்ணவேணியின் முகத்தில் அழுத்தியதில், கிருஷ்ணவேணி மயக்கமானார்., கிருண்வேணி நினைவு திரும்பினால் தனக்கு பிரச்சினை வரும் என்பதால் 
சமையலறையிலிருந்த கத்தியை எடுத்து வந்து வயிறு மற்றும் கழுத்தில் குத்திவிட்டு கத்தியை கூட எடுக்காமல் பயத்தில் ஓடிவிட்டதாக அருண்குமார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அருண்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும், விசாரணையில் அருண்குமார் கிருஷ்ணவேணியின் கணவர் ஜெயமுருகன் என்பவரின் தங்கை கணவர்  வழி உறவினர் என்பது தெரிய வந்துள்ளது. அருண்குமார் பொறியியல் பட்டதாரி என்பதும், தற்போது வேலையில்லாமல் இருப்பதும் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment