Wednesday 8 June 2016

முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலங்கை கடற்படை அதிகாரி எதிர்ப்பு

எல்லை தாண்டும் மீனவர்களை பிடிக்க உரிமை இருக்கிறது என ஜெயலலிதாவுக்கு இலங்கை கடற்படை அதிகாரி பதிலளித்துள்ளார்.


இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்பட்ட 15 மீனவர்களை மீட்கவும் 92 படகுகளை விடுவிக்கவும் கேட்டு முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு இதுவரை மூன்று கடிதங்களை எழுதிவிட்டார். மீனவர்களை மீட்பது குறித்து ஜெயலலிதா எழுதிய கடிதத்தால் எரிச்சலடைந்த கடற்படை  அதிகாரிகள் தங்கள் எரிச்சலை காட்டியுள்ளனர்.


 இது குறித்து இலங்கை  கடற்படைப் செய்தி தொடர்பாளர்  அக்ரம் அலவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,இலங்கை  எல்லைக்குள் வரும் எந்தவொரு வெளிநாட்டு மீனவர்களையும் கைது செய்வதற்கான அதிகாரம் இலங்கை  கடற்படைக்கு உள்ளது.


தமிழக மீனவர்கள் கடத்திச் செல்லப்படுவதாக முதலமைச்சர் ஜெயலலிதா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பொய்யானது. சர்வதேச கடல் எல்லைச் சட்டத்திற்கு உட்பட்டே தமிழக மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள், எனக் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment