Wednesday 15 June 2016

கருணாநிதி தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் - இன்று மாலை அறிவாலயத்தில் நடக்கிறது

                 
 சென்னை அண்ணா அறிவாலயத்தில்  இன்று மாலை 5 மணிக்கு திமுக  எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடக்கிறது.


சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி 99 இடங்களை கைப்பற்றியது. இதில் முதல்முறையாக 89 சட்டமன்ற உறுப்பினர்களை வென்று பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக திமுக தேர்வானது. பலமான எதிர்க்கட்சியின் தலைவராக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். முதல் சட்டமன்ற தொடர் நாளை துவங்குகிறது. இதையடுத்து சட்டமன்றத்தில் திமுக செயல்பாடு குறித்த ஆலோசனை நடத்த இந்த கூட்டம் இன்று நடக்கிறது. 
இந்த கூட்டத்தில் திருவாரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திமுக தலைவர் கருணாநிதி, கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட  சட்டமன்ற தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட  89 எம்.எல்.ஏக்களும் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில், சட்டமன்றத்தில் திமுக எம்எல்ஏக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும். என்பது தொடர்பாக கருணாநிதி அறிவுரைகள் கூற உள்ளார். 


சட்டமன்ற கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்பது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட உள்ளது. முதல் ஆறு மாதம் நிலைமையை உன்னிப்பாக கவனிப்பது என்ற முடிவு எடுக்கப்படலாம் என தெரிகிறது. ஆஆக்கபூர்வமான எதிர்கட்சியாக திமுக செயல்பட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளதாக திமுக எம்.எல்.ஏ ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment