Wednesday 15 June 2016

வழக்கறிஞர்களுக்கு எதிரான சட்டத்திருத்தம்- பார்கவுன்சில் நிர்வாகி திடீர் ராஜினாமா



வழக்கறிஞர் சட்டத்திருத்த மசோதா கடந்த மே 25 அமலுக்கு வந்தது. இது வழக்கறிஞர்கள் தொழிலை பாதிக்கிறது என வழக்கறிஞர்கள் போராடி வருகின்றனர், இந்த விவகாரத்தில் பார்கவுன்சிலுக்கும் ,வழக்கறிஞர் சங்கங்களுக்கும் மோதல் எழுந்துள்ளது. வழக்கறிஞர் சட்டத்திருத்த மசோதாவை எதிர்க்கும் வழக்கறிஞர் சங்கங்களுக்கு பார்கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

இதனால் சங்கங்களுக்கும் பார்கவுன்சிலுக்கும் மோதல் முற்றிவருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் அய்யப்பமணி தனது பதவியை திடீர் என ராஜினாமா செய்துள்ளார்.தனது ராஜினாமாவில் பார் கவுன்சில் சேர்மன் செல்வம் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டியுள்ள அவர், வழக்கறிஞர்களுக்கு எதிரான சட்டத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். 

No comments:

Post a Comment