Friday 24 June 2016

பட்ட காலிலேயே படும் - கருணாநிதியின் இசட் பிளஸ் பாதுகாப்பும் வாபஸ்




 கருணாநிதிக்கு தோல்வியும் பின்னடைவும் ஒரு பொருட்டே அல்ல. 1977 ல் துவங்கி பல்வேறு தோல்விகள் கட்சி பிளவு அனைத்தையும் முறியடித்தவர். 1989 ல் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகாலத்தில் அதை பறிகொடுத்தவர் பின்னர் 1991 ல் ராஜிவ் படுகொலையுடன் இணைக்கப்பட்டு படு தோல்வியை தழுவிய திமுகவை வழி நடத்தி பின்னர் 1993 ல் மதிமுக வெளியேறியபோது கட்சியை காத்து தூக்கி நிறுத்தியவர்.
 
அதன் பின்னர் 96 இமாலய வெற்றி என தொடர்ந்தது. ஆனால் அப்போதெல்லாம் கட்சி கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இருந்தது.  அவரால் வியூகங்களை வகுக்க முடிந்தது. ஆனால் தொடர்ச்சியான அழுத்தம் வாரிசுகளுக்குள்  மோதல் வந்ததால் கருணாநிதியின் கையை விட்டு கட்சி அவரவர் கோஷ்டியாக பிரிய ஆரம்பித்தது. 

விளைவு  இன்று கட்சியின் மாவட்ட செயலாளர்கள் பெரும்பாலானோர் ஸ்டாலின் கையில். கட்சியின் தீர்மானிக்கும் சக்தியாக ஸ்டாலின் மாறிவிட்டதை கடந்த சட்டமன்ற தேர்தலில் பார்த்தோம். 

தேர்தலில் வெற்றி பெற்றால்  கருணாநிதி முதல்வர்,  ஆனால் தோல்வி அடைந்ததால் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் என்ற வினோத நடவடிக்கையை வைத்தே கருணாநிதியின் நிலையை புரிந்து கொள்ளலாம் என்றார் அரசியல் நோக்கர் ஒருவர்.

தற்போது கருணாநிதி சாதாரண எம்.எல்.ஏ.  திமுகவின் கட்சித்தலைவராக இருந்தாலும் தீர்மானிக்கும் இடத்தில் ஸ்டாலின் உள்ளார். அவரே எதிர்க்கட்சித்தலைவர் இதுவே அவரை சமீப காலமாக முடக்கி போட்டுள்ளது. தற்போது மத்திய அரசு கருணாநிதிக்கான இசட் பிளஸ் பாதுகாப்பை வாபஸ் பெற முடிவு செய்துள்ளது.

உள்துறை அமைச்சகம் கருணாநிதி, உபி முதல்வர் அகிலேஷ் யாதவ், அஸ்ஸாம் மற்றும் பீகார் முன்னாள் முதல்வர்கள் தருண்கோகய், லாலு பிரசாத் யாதவ் ஆகியோருக்கான இசட் பிளஸ் பாதுகாப்பை விலக்க முடிவு செய்துள்ளது.

எதிர்க்கட்சித்தலைவராக இருந்தால் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கலாம் , அதுவும் இல்லை என்ற நிலையில் அடிமேல் அடியாக இந்த நடவடிக்கையும் வந்துள்ளது. இனி முன்னாலும் பின்னாலும் இரண்டு வாகனங்கள் கருப்பு பூனைகள் இருக்காது. போக்குவரத்தில் ஊர்ந்துதான் வரவேண்டும். எதையும் தாங்கும் இதயம் இதையும் தாங்கித்தான் ஆகவேண்டும்.

No comments:

Post a Comment