Friday 24 June 2016

கமிஷனர் அலுவலகத்தில் உதவி ஆணையர் மீது புகார்




சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தச்சு வேலை செய்யும் தொழிலாளி  உதவி கமிஷனர் ஒருவர் மீது புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரது புகாரில் கூறியிருப்பதாவது:

தேனாம்பேட்டையில் வசிக்கும் தான்  கடந்த ஆண்டு ஜூன் மாதம் புழுதிவாக்கம் பாலாஜி நகரில் வசிக்கும் உதவி கமிஷனர் முருகேசன் என்பவர் வீட்டில் தச்சு வேலைகள் செய்ய ஒப்பந்தம் போட்டதாகவும் ரூ 1 லட்சத்து 78 ஆயிரத்துக்கு ஒப்பந்தம் பேசி வேலை அனைத்தும் முடித்து கொடுத்து விட்டதாக கூறியுள்ளார்.

ஆனால் ஏசி முருகேசன் சொன்னபடி முழு பணத்தையும் தராமல் ரூ 87 ஆயிரம் மட்டும் கொடுத்த தாகவும், மேலும் தன்னிடமிருந்து கட்டில், சோபா மற்ற பொருட்கள் வாஅங்கிய வகையில் மொத்தம் 1 லட்சத்து 18 ஆயிரம் வர வேண்டியது உள்ளதாக கூறியுள்ளார்.

ஆனால் அந்த பணத்தை திருப்பி தராமல் ஒரு வருடமாக இழுத்தடித்து வந்ததாகவும் ஒரு கட்டத்தில் பணத்தை கேட்டால் பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளிடுவேன் என்று மிரட்டியதாக கூறியுள்ளார். 

இதனால் ஏசி மீது முதல்வர் தனிப்பிரிவில் புகார் அளித்ததாகவும் அந்த புகாரும் அங்கே இங்கே சுற்றி கடைசியில் கோவிந்தராஜு என்கிற விசாரணை அதிகாரியிடம் வந்ததாகவும் கடைசியில் அவரும் இழுத்தடிக்கவே விசாரித்ததில் கோவிந்தராஜு புகார் கூறப்பட்ட முருகேசனுக்கு நெருங்கிய உறவினர் என தெரிய வந்ததால் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து உதவி ஆணையர் முருகேசனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு முதலில் வேலையை சொன்னபடி முடித்து தரவில்லை என்று கூறியவர் பின்னர் மகள் திருமணம் உள்ளது முடிந்தவுடன் தருவதாக தெரிவித்துள்ளார்.

உதவி கமிஷனர் ஒருவரே பணத்தை தராமல் மிரட்டுவதாக புகார் கமிஷனர் அலுவலகத்தில் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



No comments:

Post a Comment