சென்னை கொருக்குப்பேட்டையில் குடும்ப பிரச்சனையில் கணவனை பருப்பு மத்தையால் தாக்கி கத்திரிக்கோலால் குத்திகொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.
சென்னை தண்டையார் பேட்டை சுந்தரம் பிள்ளை நகரில் வசித்தவர் இன்பநாதன்(47). ஸ்டான்லி மருத்துவமனையில் காண்ட்ராக்ட் வேலையாளாக பணிபுரிந்தார். இவரது மனைவி திவ்யா (எ) ஜெயாராணி(33). இன்பநாதன் வருமானம் குறைவு என்பதால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை வரும் . வாக்குவாதம் சண்டை நடக்கும். இந்நிலையில் நேற்றிரவு வழக்கம் போல் இருவருக்கும் தகராறு நடந்து கைகலப்பு ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திரமடைந்த மனைவி ஜெயாராணி பருப்புகடையும் மத்தையால் கணவர் திவ்யநாதனை தாக்கியுள்ளார். பின்னர் அருகிலிருந்த கத்தரிக்கோலால் அவரது இடது மார்பில் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் இன்பநாதன் பிணமானார். தண்டையார் பேட்டை போலிசார் மனைவியை கைது செய்தனர்.

No comments:
Post a Comment